தங்கம் விலை அதிரடி குறைவு!! - Asiriyar.Net

Monday, November 25, 2024

தங்கம் விலை அதிரடி குறைவு!!

 



ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை அதிரடியாக குறைந்துள்ளது.


கடந்த வாரம் முழுவதும் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில், சனிக்கிழமை ஒரு சவரன் ரூ. 58,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.


இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று சவரனுக்கு ரூ. 800 அதிரடியாக குறைந்துள்ளது. ஒரு சவரன் ரூ. 57,600-க்கும், ஒரு கிராமுக்கு ரூ. 100 குறைந்து ரூ. 7,200-க்கும் விற்பனையாகிறது.


24 கேரட் தங்கம் ஒரு சவர ரூ. 61,640-க்கும் ஒரு கிராம் ரூ. 7,705-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


இதனிடையே, வெள்ளியின் விலை தொடர்ந்து 7-வது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 101-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,01,000-க்கும் விற்பனையாகிறது.


No comments:

Post a Comment

Post Top Ad