மாணவர்களை கால் அழுத்தச் சொல்லிய ஆசிரியர் பணியிடை நீக்கம் - CEO அதிரடி உத்தரவு - Asiriyar.Net

Saturday, November 23, 2024

மாணவர்களை கால் அழுத்தச் சொல்லிய ஆசிரியர் பணியிடை நீக்கம் - CEO அதிரடி உத்தரவு

 



அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம் 


வீரகனூர் அருகே அரசு உயர் நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களை கால் அழுத்தச் சொல்லி வகுப்பறையில் ஓய்வெடுக்கும் கணக்கு ஆசிரியரின் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.


சேலம் மாவட்டம் தலைவாசல் தாலூகாவிற்கு உள்பட்ட கிழக்கு ராஜாபாளையம் கிராமத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.


இந்த பள்ளியில் கிழக்கு ராஜாபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 6 ஆம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை 90-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.


இதையும் படிக்க: 2025ஆம் ஆண்டு பொது விடுமுறை நாள்கள் அறிவிப்பு: பொங்கல், தீபாவளி எப்போது?


இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.


இதனிடையே பள்ளியில் பணியாற்றி வரும் காமக்காபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கணக்கு ஆசிரியர் ஜெயபிரகாஷ் குடிபோதையிலே பள்ளிக்கு வருவதோடு, மாணவர்களுக்கு முறையாக பாடம் எடுக்காமல் வகுப்பறையிலே குடிபோதையில் தூங்குவதாகக் கூறப்படுகிறது.


இந்நிலையில் அங்கு பயிலும் மாணவர்களை கால் அழுத்தச் சொல்லி ஒய்வேடுக்கும் விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


சேலம் மாவட்டம், கிழக்கு ராஜபாளையம் அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொன்ன ஆசிரியர் சஸ்பெண்ட் கணித ஆசிரியர் ஜெயபிரகாஷை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் அதிரடி உத்தரவு


மாணவர்களை கால் அழுத்த சொல்லி, ஆசிரியர் தூங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Post Top Ad