மல்லிப்பட்டினம் பள்ளியில் தற்காலிக தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வந்த ரமணி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தலைமை ஆசிரியர் அறிக்கை அனுப்பியுள்ளார். அதில், இப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் 10-06-2024 முதல் தற்காலிக பட்டதாரி தமிழ் ஆசிரியராக ரமணி என்பவர் 6 ம் வகுப்பு முதல் 9 ம் வகுப்பு வரை தமிழ் பாடம் போதித்து வந்தார்.
அன்னாருக்கு முதல் பாடவேலையில் வகுப்பு கிடையாது என்பதால் அவர் ஆசிரியர்களுக்கான ஓய்வு அறையில் இருந்து வந்தார் 20-11-2024 அன்று காலை 10:10 மணிளவில் ஆசிரியர்களுக்கான ஓய்வு அறையின் வரண்டா பகுதியில் சின்னமனையை சேர்ந்த மதன் என்பவர் ஆசிரியை ரமணியுடன் நின்று பேசி கொண்டிருந்தான் எதிர்பாரத விதமாக ஆசிரியர் ரமணியின் கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓட முயற்சி செய்தான்.
அவனை இப்பள்ளியின் ஆசிரியர்கள் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர். ஆசிரியர் ரமணியை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சை கொண்டு செல்லும் வழியில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துவிட்டார். இது குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்பதை தங்களுக்கு பணிந்து அனுப்பப்படுகிறது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment