புதுச்சேரியில் ஆசிரியர்களின் பணி இடமாற்றல் தொடர்பாக, திருத்தப்பட்ட கொள்கை வெளியிடப்பட்ட நிலையில், ஆட்சேபனைகளை தெரிவிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரிபள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட இடமாற்றல் கொள்கையை, ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்து போராட்டம் நடத்தினர்.ஆசிரியர்களுக்கு பாதகமான அம்சங்களை நீக்கி விட்டு, எல்லோரும் ஏற்கக்கூடிய திருத்தப்பட்ட இடமாற்றல் கொள்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினர்.
தற்போது, திருத்தப்பட்ட இடமாற்றல் கொள்கையை கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இதன் மீதான கருத்துகள், ஆட்சேபனைகள் வரவேற்கப்பட்டுள்ளன. கருத்துகளை வரும், டிச., 16ம் தேதிக்குள் கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினிக்கு அனுப்பலாம். இடமாறுதலில் முன்னுரிமை கொடுக்க வேண்டிய வகைகளை, 'ஏ' முதல் 'கே' வரையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
புதிதாக பணி அமர்த்தப்படும் ஆசிரியர்கள், பொதுவாக வேறு பிராந்தியங்களில் பணியமர்த்தப்படுவர்.
அதேபோல இடமாற்றத்திற்கான குறைந்த பட்ச பதவிக்காலம் 5 ஆண்டுகளாக இருக்கும். நிறுவன தலைவர், ஆசிரியர்கள், ஊழியர்கள், ஒரே பள்ளியில் 3 ஆண்டுகளுக்கு மேல் தொடரக்கூடாது.
தவறான தகவல் மற்றும் சான்றிதழை சமர்ப்பித்த ஆசிரியர், இடமாறுதல் பலன்களை ரத்து செய்வதை தவிர, விதிகளின் படி.
வழக்கு தொரடப்படுவேதாடு, ஒழுங்கு நடவடிக்கைகக்கும் பொறுப்பாவர். இதேபோல பல்வேறு கோட்பாடுகள், வரைவு கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment