கட்சிச் சூதில் கரைக்கப்பட்டு வரும் ஆசிரியர் இனம்! - செல்வ.ரஞ்சித் குமார் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, February 11, 2024

கட்சிச் சூதில் கரைக்கப்பட்டு வரும் ஆசிரியர் இனம்! - செல்வ.ரஞ்சித் குமார்

 



243 சரியா தவறா என்பதைத் தாண்டி, அரசுக்கு நன்றி அறிப்பு மாநாட்டில், முதல்வர் & ப.க.து அமைச்சர் படம் சரி. . . திரு.உதயநிதி ஸ்டாலின் & திரு.கே.என்.நேரு அவர்களுக்கும் ப.க.துறையின் 243க்கும் என்ன சம்பந்தம்? இது தமிழ்நாட்டு அரசிற்கான ஆசிரியர் சங்கங்களின் நன்றி அறிவிப்பு மேடையா? ஆசிரிய சங்கங்களைப் பிரித்தெடுத்துள்ள DMKன் கட்சிச் சாதனை மேடையா?


ஒரு சங்கம் சென்ற வாரம் இதே கோரிக்கைக்கு நன்றி அறிவிப்பு மாநாடு நடத்தியது. அதில் திமுக அமைச்சர்கள் படம் இடம் பெறுவதைத் தனியே கேள்விக்குட்படுத்த வேண்டிய அவசியமே நமக்கு எழவேண்டியதில்லை. ஏனெனில் அது தொடக்கம் முதலே அக்கட்சியின் ஆசிரியர் பிரிவு சங்கம்.


இப்போது இம்மேடையில் வீற்றிருக்கும் சிலர் போன மாதம் வரை DMKவிற்காக JACTTO-GEOவிற்கு ஊறுவிளைவிப்பதாக சிலரைப் பழித்துக் கொண்டிருந்தனரே!? ஆனால், இப்போது இம்மாநாட்டை இவ்வாறாக நடத்தியுள்ள இவர்கள் இப்பதாகையின் வழி சொல்ல வருவதென்னவோ????


19 ஆண்டுகால கோரிக்கையைத் தீர்த்து வைத்தோரைப் புகழ எங்களுக்கு உரிமையில்லையோ!? என்று அவர்கள் வினா தொடுக்கலாம். தொடுக்கட்டும். 19 ஆண்டுகால ஒற்றை Incrementற்கு இவ்வளவு மெனக்கிடுவோர், 19 ஆண்டுகளில் இறந்த / ஓய்வுற்ற ஆசிரியர்களின் குடும்பங்களுக்குக் கூறும் பதிலென்ன? இதே அரங்கில் முழுமையாக உள்ள CPS ஆசிரியர்களின் ஓய்வூதியம் குறித்த நிலையென்ன?


நொடிப்பொழுதும் நிலையில்லா இவ்வாழ்வில் இந்நொடிக்கான உடனடித் தேவை ஒற்றை Increment தரும் Promotionஆ? அல்லது தமக்குப் பின்னும் தன் குடும்பம் காக்கும் Pensionஆ? என்பதைச் சார்ந்தோர் யாவருமே உணர முன்வர வேண்டும்.


இது ஒருபுறமிருக்க, SSTA-வை தொ.க.து சங்கங்களுக்கு எதிரானதாகக் கூர் தீட்டப் பார்த்து ஒரு கட்டத்தில் தங்களது நிர்பந்தங்களையும் மீறி தொடர் போராட்டத்தில் அவர்கள் இறங்கவே, அவர்களுக்கு எதிராக உருவாக்கி விட்டதுதான் இம்மேடையில் உள்ள மற்றுமொரு சங்கம்.


ஆம். SSTAவில் 2009 & TET ஆசிரியர்களிடையே கோரிக்கை அளவில் எழுந்த புகையைப் பயன்படுத்தி 2009 ஆசிரியர்களை ஒருக்கிணைப்பதாகக் கூறி அவர்களுக்கு ஆளுந்தரப்பின் ஆகாச சூரர்களே ஒரு பெயரைக் கொடுத்து சங்கமாக்கி மேலுமொரு பிரிவினையைத் தொடங்கி வைத்தனர்.


அவர்கள்தான் இன்று 243ன் கொடுமையைவிட ஆட்சியாளர்களின் அரவணைப்புச் சுகபோகமே முக்கியமென இந்நன்றியறிவிப்பு மேடையைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். இப்போக்கில் உடன்பாடில்லாத 2009 ஆசிரியர்கள் அநேகர் இவர்களைவிட்டு நீங்கிவிட்டனர்.


DMK இ.நி. ஆசிரியர் ஊதியக் கோரிக்கையை நிவர்த்தி செய்ய மெய்யாகவே விரும்பியிருப்பின், SSTAவை முன்வைத்தோ / தமது அதிகாரப்பூர்வ சங்கமான தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தை முன்வைத்தோ சிக்கலைத் தீர்த்து வைத்திருந்திருக்கலாம். ஆனால், அவர்களுக்கோ மேலுமொரு சங்கமாக இ.நி.ஆகளைப் பிரிப்பது மட்டுமே இதுவரையான நோக்கமாக இருந்து வந்துள்ளது.


2009ற்குப் பின்னர், இன்று வரை மறந்தும் கூட  இ.நி.ஆகளுக்கு DMK நன்மை செய்தது கிடையாது என்பதே வரலாறு.


ஊதியத்தைப் பறித்தது. . .

Incentiveஐப் பறித்தது. . .

EL Surrenderஐப் பறித்தது. . .


அட அவ்வளவு ஏன்,

EE ஈடுசெய் விடுப்பைக் கூட பறித்தது


என்று தொடர்ந்து வஞ்சகத்தை மட்டுமே செய்து வரும் DMKன் மேடையில். . . .


அதுவும் இ.நி.ஆகளின் B.T Promotionஐப் பறித்துள்ள 243க்கு நன்றி சொல்லும் மேடையில். . . .


இன்று சில இ.நி.ஆகளே ஆட்சியாளர்களின் / ஆட்சியாளர்களின் நேசம் வேண்டுவோரின்  சூழ்ச்சியால் ஏற்றப்பட்டுள்ளனர்.


இவ்வளவு நடந்தும் இன்றும் இ.நி.ஆ-கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த ஆசிரிய சமூகமும் திமுகவை நம்பிக்கொண்டிருக்கின்றனர். . . எதையாகிலும் தந்துவிடாதா இந்த திமுக அரசு என்று. ஏனென்றால் இதை அண்ணா கண்ட திமுகவாக. . . . கலைஞர் கொண்ட திமுகவாக. . . . இன்றும் நம்பி வருகின்றனர். இது நம்பிக்கையா? மூடநம்பிக்கையா? என்பதற்கு இந்த விடியல் ஆட்சியிலேயே உறுதியாக விடை கிடைத்துவிடும்.


நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்


எந்த ஆட்சியானாலும், ஆசிரிய சமூகம் கட்சிச் சூழ்ச்சிக்காரர்களுக்கும், அவர்தம் சூழ்ச்சிகளுக்கும் இரையாவதை  நிறுத்திக் கொண்டு தங்களுக்கான சரியான சங்கத்தை / கூட்டமைப்பைப் பெரும்பான்மை உணர்வோடே தெரிவு செய்து ஒற்றுமையோடே களத்தில் நிற்க முன்வராத வரை ஒற்றை கோரிக்கையை அல்ல, நம் முன்னோர் பெற்று ஈந்துள்ள உரிமையெனும் மழலைகளின் ஒற்றை மயிரைக்கூட நமக்கானதாக நம்மால் தற்காத்து வைத்துக்கொள்ளவே முடியாது.



Post Top Ad