தமிழ்நாடு பொது நிதி மேலாண்மை அமைப்பு, களஞ்சியம் இணைய முகப்பு மற்றும் கைபேசி செயலி, புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு வலைத்தளம் மற்றும் கைபேசி செயலி தொடக்கம்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, February 28, 2024

தமிழ்நாடு பொது நிதி மேலாண்மை அமைப்பு, களஞ்சியம் இணைய முகப்பு மற்றும் கைபேசி செயலி, புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு வலைத்தளம் மற்றும் கைபேசி செயலி தொடக்கம்!

 

மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாடு பொது நிதி மேலாண்மை அமைப்பு, களஞ்சியம் இணைய முகப்பு மற்றும் கைபேசி செயலி, புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு வலைத்தளம் மற்றும் கைபேசி செயலியை தொடங்கி வைத்தார்


செய்தி வெளியீடு எண்: 387

செய்தி வெளியீடு தேதி : 27.02.2024


மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் கருவூலம் மற்றும் கணக்குத் துறை சார்பில் தமிழ்நாடு பொது நிதி மேலாண்மை அமைப்பு (TNPFTS), களஞ்சியம் இணைய முகப்பு மற்றும் கைபேசி செயலி, புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு வலைத்தளம் மற்றும் கைபேசி செயலி தொடங்கி வைத்தார் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் இன்று (27.02.2024) கருவூலம் மற்றும் கணக்குத் துறை சார்பிலான பின்வரும் நிகழ்ச்சிகளை பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை 6வது தளத்தில் தொடங்கி வைத்தார்.


தமிழ்நாடு பொது நிதி மேலாண்மை அமைப்பு (TNPFTS), அரசு பொது நிதி நடைமுறையை எளிமைப்படுத்துதல், கருவூலத்தில் இருந்து கடைசி பயனர் வரை நிதி சென்று சேர்வதைக் கண்காணித்தல், அரசு செலவினத்தை முறைப்படுத்துதல், சிறந்த நிதி கண்காணிப்பு செயலி மூலம் திட்டங்களை தீட்டுதல், அரசின் கடனைக் குறைத்தல் என்ற வகையில் தமிழ்நாடு பொது நிதி மேலாண்மை அமைப்பு துவக்கி வைக்கப்பட்டது. 


களஞ்சியம் இணைய முகப்பு மற்றும் கைபேசி செயலி, தமிழ்நாடு அரசின் கருவூலம் மற்றும் கணக்குத் துறை வாயிலாக அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான சுயசேவைகளை நேரம் மற்றும் இருப்பிடம் சாராமல் பயன்படுத்தும் வகையில் கைபேசி செயலி துவக்கி வைக்கப்பட்டது. புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு வலைத்தளம் (Website) மற்றும் கைபேசி செயலி (Mobile App) அரசு ஊழியர்கள். ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் (NHIS/PNHIS) சிகிச்சை பெற அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள், சிகிச்சைகளின் விவர பட்டியல்கள். மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைகள் பதிவிறக்கம் செய்யும் வசதிகள் மற்றும் பல விவரங்களை அறிந்துகொள்ளும் வகையில் வலைத்தளம் மற்றும் கைபேசி செயலி துவக்கி வைக்கப்பட்டது.


கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் பணியாளர்களுக்கு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை (IFHRMS) தொடர்பான பயிற்சிகள் வழங்கிடவும், நிதித்துறையின் கீழ் இயங்கும் துறை தலைமைகளின் பயன்பாட்டிற்கும் மற்றும் பொதுவான செயல்பாடுகளுக்காகவும் ரூ.16.11 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன வசதிகளுடன் கூடிய பயிற்சி கூடம் மற்றும் ரூ. 9.85 இலட்சம் மதிப்பீட்டில் நூலகம் திறக்கப்பட்டது. சென்னை மற்றும் மதுரை மண்டல இணை இயக்குநர்களின் அலுவலக பயன்பாட்டிற்காகவும், புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்ட மருத்துவ அலுவலரின் பயன்பாட்டிற்காகவும் ரூ.26.10 இலட்சம் மதிப்பீட்டில் மூன்று மகேந்திரா பொலிரோ வாகனங்கள் வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் நிதித்துறை. முதன்மை செயலாளர். திரு.த.உதயச்சந்திரன். இ.ஆ.ப. அவர்கள், அரசு சிறப்பு செயலாளர், திரு. பிரசாந்த் மு.வடநேரே, இ.ஆ.ப. அவர்கள், கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையர் திரு.க.விஜயேந்திர பாண்டியன், இ.ஆ.ப. அவர்கள். அரசு இணைச் செயலாளர், திரு. எச்.கிருஷ்ணனுண்ணி, இ.ஆ.ப. அவர்கள் மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Post Top Ad