தமிழக பட்ஜெட் 2024 - முக்கிய அறிவிப்புகள் என்னென்ன? - முழு விவரம் - Asiriyar.Net

Monday, February 19, 2024

தமிழக பட்ஜெட் 2024 - முக்கிய அறிவிப்புகள் என்னென்ன? - முழு விவரம்

 



தமிழக அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.


TN Budget 2024 - 2025 | முக்கிய அறிவிப்புகள் :


# அண்ணாவின் அறிவுரைகளை தாங்கியே திட்டங்கள் தயாரிப்பு - அமைச்சர் தங்கம் தென்னரசு


ரயில்வே, வங்கிப் பணிகளில் தமிழக இளைஞர்கள் அதிகளவில் சேர கோவை, மதுரை மண்டலத்தில் விடுதி வசதியுடன் 6 மாத பயிற்சி வழங்க ரூ. 6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.


கோவையில் அதிநவீன நூலகம் கருணாநிதி பெயரில் புதிதாக கட்டப்படும்.


# பள்ளிக் கல்வித்துறைக்கு வரும் கல்வியாண்டுக்கு ரூ.44,042 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


# பேராசிரியர் அன்பழகன் திட்டத்தின் கீழ் ரூ. 1,000 கோடியில் பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டப்படும்.


# அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம். ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் விரிவாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு


#:இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.


# அரசுப் பள்ளிகளில் இருந்து கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் வரும் கல்வியாண்டில் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படும். இதற்காக ரூ.370 கோடி ஒதுக்கீடு




மகளிர் இலவச பேருந்து திட்டத்துக்காக இந்த நிதியாண்டில் ரூ. 3,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளிலும் மகளிர் இலவச பேருந்து திட்டம் விரிவுபடுத்தப்படும். 


# பத்தாயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் துவக்கப்படும்


# 45 பாலிடெக்னிக் கல்லூரிகள் மேம்படுத்தப்படும்


#மகளிர் மேம்பாட்டிற்காக ரூ.13,720 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது  - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு


# மாற்று பால் இனத்தவரின் விடுதி மற்றும் கல்வி கட்டணங்களை அரசை ஏற்கும்


கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுத் திட்டங்களுக்கு ரூ. 5 கோடி ஒதுக்கீடு


# நாமக்கல் திண்டுக்கல் பெரம்பலூர் மாவட்டங்களில் புதிய குடிநீர் திட்டங்கள் அமல்படுத்தப்படும்


தமிழ் இலக்கியங்களை மொழி பெயர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற 25 நூல்களை மொழிபெயர்க்க ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


#குடிசையில்லாத் தமிழ்நாட்டுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டம் - தங்கம் தென்னரசு


# ரூ.1,000 கோடியில் சாலைகள் மேம்படுத்தப்படும்: தங்கம் தென்னரசு



#BREAKING | மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டம் மலைப் பகுதிகளிலும் விரிவுபடுத்தப்படும் - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு


# கோவையில் ரூ.1100 கோடியில் தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்படும்


##சிலப்பதிகாரம், மணிமேகலை மொழிபெயர்க்க ரூ.2 கோடி - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு


#₹356 கோடியில் 2000 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்படும்.


 ₹500 கோடியில் 5000 ஏரிகள், குளங்கள் புனரமைப்பு செய்யப்படும்.“தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்க முதலமைச்சரின் தாயுமானவர் என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படும். 


நிதி ஆயோக் அறிக்கைப்படி வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் 2.2% மக்களை கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்ற அரசு முடிவு எடுத்துள்ளது. 


மிகவும் வறிய நிலையில் உள்ள 5 லட்சம் ஏழைக்குடும்பத்தினருக்கு அரசின் உதவிகளை ஒருங்கிணைத்து வழங்கி அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க அரசு உறுதி அளிக்கிறோம்.


“சிங்காரச் சென்னை 2 திட்டத்திற்கு ₹500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் சாலைகளை விரிவுபடுத்த ₹300 கோடி ஒதுக்கீடப்பட்டுள்ளது. 


சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ₹1000 கோடியும் வடசென்னை பகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ₹100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.








No comments:

Post a Comment

Post Top Ad