இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் - முடிவுக்கு கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை அதிரடி முடிவு? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, February 29, 2024

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் - முடிவுக்கு கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை அதிரடி முடிவு?

போராடும் இடைநிலை ஆசிரியர்கள் பணி நீக்கம், ஊதியம் பிடித்தம் செய்ய பள்ளிக்கல்வித்துறை அதிரடி முடிவு? - News 18 Tamil Video


சம வேலைக்கு சம ஊதியம் வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை நிறைவேற்றக்கோரி 2009க்கு பிறகு பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் போராடி வருகின்றனர் தற்போது இன்று முதல் சென்னையிலும் பிற மாவட்ட தலைநகரங்களிலும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது


இப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பள்ளி கல்வித்துறை அதிரடி முடிவுகளை எடுத்துள்ளதாக நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி சேனல் செய்திகளை வெளியிட்டுள்ளது


அதன்படி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்யவும் மேலும் தொடர் நடவடிக்கைகளை எடுக்கவும் பள்ளி கல்வித்துறை முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


இதன் பிறகும் ஆசிரியர்கள் போராட்டம் தொடர்மையானால் பணி நீக்கம் செய்யவும் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்ய உள்ளதாக அந்த செய்தி சேனலில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.


அந்தச் செய்தி சேனலின் ஆசிரியர்கள் போராட்டம் பள்ளிக்கல்வித்துறை முடிவு குறித்த முழு வீடியோ கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது


Click Here - இடைநிலை ஆசிரியர்கள் பணி நீக்கம் -   News 18 Tamil Full VideoPost Top Ad