JACTTO GEO ,- கொடுத்த வாக்குறுதியை நிதி நிலைமையைச் சொல்லி கைவிரிப்பது சரியா?! - விகடன் தலையங்கம் - Asiriyar.Net

Friday, February 16, 2024

JACTTO GEO ,- கொடுத்த வாக்குறுதியை நிதி நிலைமையைச் சொல்லி கைவிரிப்பது சரியா?! - விகடன் தலையங்கம்

 




தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.கணேசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவில்லை. 


இதை உடனடியாக அமலுக்கு கொண்டுவர வேண்டும். நிதிப் பற்றாக்குறையால் நிறுத்தப்பட்ட விடுப்பு சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். 


நிலுவைத் தொகை, இடைநிலை, முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டைக் களைதல், காலி பணியிடங்களை நிரப்புதல், சத்துணவு, அங்கன்வாடி, துப்புரவுப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 


ஆனால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே வரும் 15-ம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்கிறோம். 


மேலும் அரசு காலம் தாழ்த்தும் பட்சத்தில் 26-ம்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம்" என்றார்.


இதுகுறித்து தமிழக நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "பல்வேறு வகைகளிலும் அரசு அலுவலர்களின் நலனுக்காகப் பல முன்னெடுப்புகளைத் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.


 அவர்களுடைய வேறு பல கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டுமென்ற எண்ணம் இருந்தாலும், தொடர்ச்சியாக தமிழ்நாடு சந்தித்த இரண்டு மாபெரும் இயற்கைப் பேரிடர்கள், அதற்காக மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகள், அந்தப் பேரிடர் மற்றும் வெள்ள நிவாரண பணிகளுக்கான எதிர்பாராத பெரும் செலவினங்கள், மேலும் இவற்றுக்கு மத்திய அரசிடமிருந்து நிதி ஏதும் பெறப்படாத நிலையில், அதனை மாநில அரசே மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலை உள்ளது.


அதன் நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் 14.2.2024 அன்று சந்தித்து பேசினர். 


பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தினர், 'எங்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும்' என ஸ்டாலின் உறுதி அளித்திருக்கிறார். இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைக்கிறோம்' என்றனர்.


No comments:

Post a Comment

Post Top Ad