12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுரை! - Asiriyar.Net

Thursday, February 29, 2024

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுரை!

 



தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயங்கும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி மேனிலை பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கின்ற மாணவ, மாணவியருக்கான பொதுத் தேர்வு நாளை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. 


இந்நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்பாடுகள் குறித்து சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் விளக்கம் அளித்தார். அப்போது; நாளை தமிழகத்தில் 7,72,200 மாணவர்கள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.


154 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காவல்துறையினரின் பாதுகாப்புடன் 875 வழித்தடங்களில் வினாத்தாள்கள் மையங்களுக்கு கொண்டு செல்லப்படும். மாநிலம் முழுவதும் 3,302 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. 


12-ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர்கள் தைரியத்துடன் எழுத வேண்டும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எவ்வித அழுத்தமும் இன்றி எழுத வேண்டும். தேர்வெழுதும் மாணவர்களுக்கு பெற்றோர் அழுத்தம் தரக்கூடாது. தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்துகொடுக்கப்படும்.


பேருந்து, தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட வசதிகளும் செய்து தரப்படுகின்றன. உயர்கல்வி சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34% அதிகரித்துள்ளது. பாலிடெக்னிக், ஐடிஐ போன்ற படிப்புகளில் சேர்வதால் பிளஸ் டூ எழுதுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம் இவ்வாறு கூறினார்.


No comments:

Post a Comment

Post Top Ad