2 ஆண்டுகளில் 50,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் – முதலமைச்சர் அறிவிப்பு - Asiriyar.Net

Saturday, February 17, 2024

2 ஆண்டுகளில் 50,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் – முதலமைச்சர் அறிவிப்பு

 



தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையங்கள் மூலம் ஜூன் மாதத்திற்குள் 10,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.


அடுத்த 2 ஆண்டுகளில் அரசுப் பணிகளில் காலியாக உள்ள 50,000 இடங்களும் நிரப்படும் என்றும் முதலமைச்சர் கூறினார்.


சென்னை கலைவாணர் அரங்கில் மக்களுடன் முதல்வர் திட்டத்திற்கு விண்ணப்பித்த பயனாளிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து, டி.என்.பி.எஸ்.சி. எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் பல்வேறு துறைகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 1,508 இளைஞர்களுக்கு, பணி நியமன ஆணையை முதலமைச்சர் வழங்கினார்.


பின்னர் பேசிய முதலமைச்சர், அடுத்த 2 ஆண்டுகளில் அரசுப் பணிகளில் காலியாக உள்ள 50,000 இடங்கள் நிரப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதில், இதில், ஜூன் மாதத்திற்குள் 10,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்



No comments:

Post a Comment

Post Top Ad