ஏப்ரல் 2024 முதல் வருமான வரியினை பிடித்தம் செய்யவுள்ள IFHRMS மென்பொருள் - ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 10-03-2024க்குள் வருமான வரி பிடித்தம் செய்ய பழைய முறை / புதிய முறையை தேர்வுசெய்ய வேண்டும் - சென்னை தெற்கு ஊதியம் மற்றும் கணக்கு அலுவலர் சுற்றறிக்கை
எதிர்வரும் 2024-2025ஆம் நிதி ஆண்டில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் வருமான வரியானது IFHRMS மென்பொருள் தானாகவே பிடித்தம் மேற்கொள்ளும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேற்காண் மென்பொருளானது தங்களது வரும் நிதியாண்டின் ஊதியத்தினை (வருடாந்திர ஊதிய உயர்வு முதலியவற்றை) கணக்கிட்டு ஏப்ரல் 2024 முதல் வருமான வரியினை பிடித்தம் செய்யவுள்ளது. எனவே, நாம் வருமான வரிக்கான பழைய முறை மற்றும் புதிய முறை இதில் ஏதேனும் ஒன்றினை தேர்வு செய்துகொள்ள வேண்டும். 01.03.2024 முதல் 10.03.2024 வரை இதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
எனவே, நம் பள்ளி ஆசிரியர்கள் மேற்காண் தேதியில் தங்களது IFHRMS Employee Code வாயிலாக இப்பணியினை மேற்கொள்ள வேண்டும்.
நாளது தேதிக்குள் Old Regime or New Regime option-யை தேர்வு செய்யாவிட்டால் தானாகவே New Regime (Default-ஆக) என்பதை கணக்கிட்டு ஏப்ரல் 2024 மாத ஊதியத்திலிருந்து வருமான வரி பிடித்தம் மேற்கொண்டுவிடும். இதனை நாம் மாற்றம் செய்ய இயலாது.
மேற்காண் செய்தியானது 19.02.2024 அன்று நடைபெற்ற மதுரை மண்டல கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment