எந்த வருடமும், எந்த நாட்களும் சிறப்பாய் அமைய 10 யோசனைகள்...! ஒன்றிரண்டு கடை பிடித்தால் கூட நலம் தான். கட்டாயம் ஒன்றும் இல்லை. சும்மா படியுங்கள்.
1.ஒன்றோ இரண்டோ வாட்சப் குழுக்கள் தவிர அனைத்தில் இருந்தும் வெளியே வந்து விடுங்கள்.
2. நாள் ஒன்றிற்கு இருபதே நிமிடம், பள்ளியில் கூறிய சின்ன சின்ன உடற்பயிற்சிகளை செய்ய முயலுங்கள், குறிப்பாக நடைபயிற்சி, படிகள் ஏறுதல் மேற்கொள்ளுங்கள்.
3. நம் வீட்டை விட பக்கத்து வீடு பெரியதாகத்
தான் இருக்கும், நம் குழந்தைகளை விட மற்றவர்கள் குழந்தைகள் நன்றாகத் தான் படிக்கும். நம்மை விட மற்றவரிடம் அதிகம் வசதி இருக்கத் தான் செய்யும். நம்மை விட மற்றவர்கள் அழகாக தான் தெரிவார்கள். ஏற்ற தாழ்வுகள் இல்லாவிடில் நமக்கு வாழ்க்கையில் கற்று கொள்ள ஒன்றும் இருக்காது என்று உணருங்கள். ஆக இதற்கெல்லாம் கவலைப்
படாதீர்கள்.
4. சிறு குழந்தைகளுடன் உரையாடுங்கள். புத்துணர்ச்சி பெறுவீர்கள்
5. உங்களுக்கு நன்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களுடன் பகிர முயற்சியுங்கள்.யாரையும் யாரும் திருத்த முடியாது என்று அறியுங்கள். முகநூல் பதிவர்களாக இருப்பின், குதர்க்கமான கருத்துக்களுக்கு பதில் சொல்லாமல் கடந்து செல்லுங்கள்.
6. உங்கள் கருத்துக்களை, நம்பிக்கைகளை ஒரு போதும் திணிக்காதீர்கள். மற்றவர்கள் செய்வது தவறு என்று தெரிந்தால் சொல்லிப் பாருங்கள். இல்லையென்றால் விட்டு விடுங்கள்.
7. சின்ன விஷயங்களுக்கு கூட நன்றி சொல்லப்
பழகுங்கள். உங்கள் மீது தவறு, அது சிறியதாக இருந்தாலும் கூட வருத்தம் தெரிவியுங்கள். அது உங்களை உயர்த்தும்.
8. வாரத்திற்கு ஒரு முறை
யாவது தாய் தந்தையிடரிடம், மனைவி மற்றும் பிள்ளைகளோடு உரையாடுங்கள். அக்கம்பக்கத்தில் வயதானவர்கள் இருந்தால் மாதத்திற்கு ஒருமுறையாவது அவருக்கு பிடித்த ஏதோ ஒரு தலைப்பில் சும்மாவாவது ஜாலியாக உரையாடிவிட்டு வாருங்கள்.
9. வெள்ளை சர்க்கரை, பாலை, உப்பை தவிர்க்க அல்லது குறைக்க முயலுங்கள். மது, புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து முற்றிலும் விடுபட முயற்சி செய்யுங்கள்.
10. எப்பொழுதும் புன்சிரிப்போடு இருங்கள். சிரித்து வாழுங்கள்..