முதுகலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு - முக்கிய அறிவிப்பு! - Asiriyar.Net

Wednesday, February 4, 2026

முதுகலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு - முக்கிய அறிவிப்பு!

 



முதுகலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு - முக்கிய அறிவிப்பு! 

2023-24, 2024-25 ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் மற்றும் கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 


கலந்தாய்வு நடைபெறும் நாட்கள் & பாடங்கள்:

• 07.02.2026 (சனிக்கிழமை): தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் பொருளியல்.


• 09.02.2026 (திங்கட்கிழமை): தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல், வணிகவியல், கணினி பயிற்றுநர் நிலை-1, உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் அரசியல் அறிவியல்.


இடம்:

விண்ணப்பதாரர்களின் வீட்டு முகவரி அடிப்படையில் அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் கலந்தாய்வு நடைபெறும். 


கொண்டு செல்ல வேண்டிய அசல் சான்றிதழ்கள்:

கலந்தாய்வின் போது கீழ்க்கண்ட சான்றிதழ்கள் முதன்மைக்கல்வி அலுவலர்களால் சரிபார்க்கப்படும்: 


• SSLC & HSC சான்றிதழ்கள்

• இளங்கலை (UG), முதுகலை (PG) & பி.எட் (B.Ed) பட்டச் சான்றிதழ்கள்

• சாதிச் சான்றிதழ் (Community Certificate)

• PSTM சான்றிதழ் (பொருந்தினால்)

• மாற்றுத்திறனாளி சான்றிதழ் (பொருந்தினால்)


பணி நியமன ஆணை:

பணி நியமன ஆணைகள் சென்னையில் நடைபெறும் விழாவில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படும்.



No comments:

Post a Comment

Post Top Ad