TNTET தேர்வில் வெற்றியை எட்ட சில வழிகாட்டுதல் முறைகள் - Asiriyar.Net

Monday, September 1, 2025

TNTET தேர்வில் வெற்றியை எட்ட சில வழிகாட்டுதல் முறைகள்

 




* தேர்வர்கள் பாடவாரியாக நாட்கள் ஒதுக்கி முழு முயற்சியுடன் படிக்கவும்.


* தேர்வு காலம் அருகில் உள்ளதால் ஒரு நாளுக்கு அதிகபட்சம் 14-15 மணி நேரம் படிப்பது பயனளிக்கும்.


* ஆன்லைனில் காலம் செலவழிப்பதை குறையுங்கள். காலை மாலை  1 மணி நேரம் மட்டும் மொபைலை பயன்படுத்தி படியுங்கள்.


* முழு புத்தக வாசிப்பு அவசியம்.


*எந்நிலை வந்தாலும் மனம் தளராதீர் . உழைபிற்கு ஏற்ற ஊதியம் நிச்சயம் உண்டு.


*தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் பாடப்பகுதியை வரி விடாமல் வாசிப்பதன் மூலம் 28, 28, 55  மதிப்பெண் வரை பெறலாம்


* அறிவியல் பகுதி அதிக பாட திட்டம் கொண்டது. குறிப்பெடுத்து திருப்புதல் செய்தல் பயனளிக்கும்


*சமூக அறிவியல் நிகழ்வுகளை பட்டியலிட்டு படிக்கலாம்


* உளவியல் குறைவான பாட அளவுடையது. ஆனால் மிக ஆழமாக உட்கூர்ந்து படித்தல் அவசியம்


*கணிதம் புரிதல் இன்றி படிப்பது பலனளிக்காது. நடைமுறை கணக்குகள் அதிகளவில் பயிற்சி எடுத்தல் சிறந்தது


*ஆங்கிலம் மொழி ஆளுமை அடிப்படையில் கேட்கபடும் வினாக்கள் அமையும்.


*வகுப்பு 6, 7 படிப்பதற்கு எளிமையானவை இவற்றை படிக்க கால அளவு குறைவாக பயன்படுத்தவும்


*9, 10 வகுப்பு பாட பகுதிகள் அதிகமான கடின தன்மை உடையது. இவற்றை ஆழ்ந்து படிக்கவும். கால அளவு அதிகம் தரவும்


* தமிழ், அறிவியல், ச.அறிவியல் படிப்பதை முதலில் துவங்குங்கள். இவை சுவாரஸ்யம் மிக்கவை. எனவே சலிப்பு வராது


* நேர மேலாண்மை அவசியம். கால அளவு குறைவு என்பதால் விரைவாக மற்றும் ஆழ்ந்து படிக்கவும்


* எதிர்வினை எண்ணங்களை தவிருங்கள். இங்கு எல்லோரும் திறமை மிக்கவரே


* தண்ணீர் இயன்ற வரை குடிக்கவும். சோர்வை போக்கும்


* கவன சிதறல் தரும் இடங்களை தவிர்த்து அமைதி நிறைந்த இடத்தில் படிக்க பழகவும்


* வெற்றி வாய்ப்பை நோக்கி நம்பிக்கையுடன் பயணியுங்கள். எண்ணமே செயலாகிறது


K.PRATHEEP, BT ASST

GHSS-POONGULAM

TIRUPATTUR DT


No comments:

Post a Comment

Post Top Ad