TET Case - பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு - Asiriyar.Net

Monday, September 1, 2025

TET Case - பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

 



இன்று வழங்கப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வு தீர்ப்பின் குறிப்புகள்.. வருமாறு..


தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று இந்த முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.


நீதிபதி தீபான்கர் தத்தா தலைமையிலான அமர்வு ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது


 டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு ஆண்டுதோறும் மத்திய, மாநில அரசுகளால் தனித்தனியாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்ச்சி பெறுவோர் மட்டுமே ஆசிரியராக பணியில் சேர முடியும் என்ற நிலை உள்ளது.


 சர்வீஸில் இறுதி நிலையில் இருக்கும் அதாவது 55 வயதுக்கு     மேல் உள்ள ஆசிரியர்கள் அவர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் அவர்கள் பணியில் தொடரலாம்..


 ஆனால் பதவி உயர்வு வேண்டுமென்றால் அவர்கள் உடனடியாக தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்..


 அனைத்து ஆசிரியர்களும் இரண்டு ஆண்டுக்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கால நிர்ணயம்..


29/7/2011 க்கு பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தங்களது பணியில் தொடர இரண்டு ஆண்டுகளுக்குள் தகுதித்தேர்வு தேர்ச்சி அவசியம்...


29/7/2011 முன்பு நியமிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களும் பதவி உயர்வு பெற தகுதித்தேர்வு அவசியம்...


 பதிவி உயர்வுக்கு கட்டாயம் தகுதி தேர்வில் தேர்ச்சி என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.


ஆசிரியர்கள் ஓய்வுபெற 5 ஆண்டுகள் மட்டுமே இருந்தால் அவர்கள் பணியை தொடரலாம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திபான்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.


மேலும், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற டெட் தேர்வில் தகுதி பெற வேண்டும். ஆசிரியர்கள் டெட் எனப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனில் வேலையை விட்டு வெளியேறலாம் அல்லது சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


*பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு அவசியம். மேற்காண் சில விதிவிலக்குகள் வழங்கப்பட்டுள்ளது


சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களில் டெட் தேர்வை கட்டாயம் ஆக்க முடியுமா? அதுபோல செய்தால், சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களின் கல்வி உரிமையை பாதிக்குமா? என்று ஆராயவும் உச்ச நீதிமன்றம் சார்பில் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.


*ஆசிரியர் தகுதித் தேர்வு சிறுபான்மை பள்ளி வழக்குகள் தலைமை நீதிபதி முடிவெடுக்க  பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. முழுமையான தீர்ப்பு வரும் வரை பொறுமை காப்போம்


1 comment:

  1. Many serve as teachers for many years. They know how to teach students. They have more experience handling students for their betterment according to the situation of ages. But they are not capable of attending the TET exams as a fresh candidates waiting for postings.
    This is totally a failure of both the government and the court of Justice.

    ReplyDelete

Post Top Ad