முதல்-அமைச்சர் நடத்தும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த ஆய்வு கூட்டம் - Asiriyar.Net

Tuesday, November 5, 2024

முதல்-அமைச்சர் நடத்தும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த ஆய்வு கூட்டம்

 



பள்ளிக்கல்வித்துறை சார்ந்த ஆய்வு கூட்டத்தை வரும் 8-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்த உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-


"தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 8-ந்தேதி பள்ளிக்கல்வித்துறை சார்ந்த ஆய்வு கூட்டத்தை நடந்த உள்ளார். அதனை முன்னிட்டு எனது தலைமையில் பள்ளிக்கல்வி இயக்ககங்களின் இயக்குநர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் அறிவிக்கப்படவுள்ள புதிய திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டோம்."


No comments:

Post a Comment

Post Top Ad