"இதுதான் எங்கள் நிலைமை" - ஓரு ஆசிரியரின் சோதனை பதிவு - Asiriyar.Net

Sunday, November 3, 2024

"இதுதான் எங்கள் நிலைமை" - ஓரு ஆசிரியரின் சோதனை பதிவு

 




முதன்மை அதிகாரி: இந்த வாரம் பள்ளிகளில் என்ன Task கொடுத்திருக்கோம்?


HSS PA: SIDS ல School  கட்டிடம் சம்பந்தமாக Emis ல பதிவேற்றம் செய்யனும் Sir 


முதன்மை அதிகாரி: GOOD,தலைமையாசிரியருக்கு Voice call விட்டுருங்க.


PA2: சத்துணவு சாப்பிடும் மாணவர்கள்,சீருடை தேவைப்படும் மாணவர்களுக்கு பெற்றோருடன் ஒப்புதல் வாங்கி Emis ஏற்றனும் சார்.


முதன்மை அதிகாரி:  OK, தலைமை யாசிரியர்களுக்கு Google sheet போட்டிருங்க..உடனே Fill பன்ன சொல்லுங்க......


*DI 1*: வீர் கதா   போட்டி MY GOV App ல் ஏற்றனும் சார்..


முதன்மை அதிகாரி: OK, Whats apoல  தலைமையாசிரியர்களுக்கு தகவல் கொடுத்திருங்க...


DC 1: வாசிப்பு இயக்கம் 6 முதல் 9  வரை  உள்ள ஆசிரியருக்கு TNTP  ல Training இருக்கு sir.


முதன்மை அதிகாரி : Super,  School mail  kku ஒரு Proceeding தலைமையாசிரியருக்கு அனுப்பிடுங்க.....


DC 2:கலைத்திருவிழா போட்டி1-5,மற்றும் 6-8 க்கு  நடத்தனும் sir.


முதன்மை  அதிகாரி: Ok  Brc சூப்பர்வைசர் மூலம் தலைமை ஆசிரியர்களுக்கு Meeting போட்டிருங்க.....

Eco co-ordinator: SIDP சாரந்து  பட்டதாரி ஆசிரியருக்கு ஒரு நாள் பயிற்சி இருக்கு சார்..


முதன்மை அதிகாரி: Ok தலைமை யாசிரியர்களுக்கு தகவல் கொடுத்திருங்க.....சிறப்பாக நடத்திடலாம். 


Dc3: முதுகலை ஆசியருக்கு  DIET ல  இரண்டு நாள் பயிற்சி இருக்கு சார்....  


முதன்மை அதிகாரி: OK ,கலந்துக்க சொல்லி தலைமையாசிரியருக்கு தகவல் அனுப்பிருங்க....


DC 3: புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன்  Pending list Update செய்யச் சொல்லனும்  சார். 


முதன்மை அதிகாரி: Ok  தலைமை

யாசிரியருக்கு...... 


DC:4  literacy கிளப் பள்ளி அளவில் நடத்தி Emis la பதியனும் சார்.


முதன்மை அதிகாரி: Ok  BRTE க்கிட்ட சொல்லி தலைமையாசிரியர்களை கண்காணிங்க....


*DI 2*: அப்துல் கலாம் பிறந்த நாள் விழா போட்டி நடத்தனும் சார்.

 

முதன்மை அதிகாரி: Ok தலைமை யாசிரியருக்கு தகவல்......


Exam DC: +1,10th பெயர்பட்டியல் Emis லிருந்து Exam portal க்கு மாற்றி பெயர்பட்டியல் சரிபாக்கனும் சார்

மேலும் தமிழ் திறனாய்வுத்தேர்வு நடத்தனும் சார். 


முதன்மை அதிகாரி: தலைமையாசிரியர்களுக்கு தகவல்.......


*DI 3*: தமிழ்வளர்ச்சி துறை சார்பில்  நேரு மாமா‌ சார்ந்ந பேச்சுப்போட்டி இருக்கு சார்.. 


முதன்மை அதிகாரி: OK ,Ok தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் ......


Coll Edu Dc: காலாண்டு தேர்வு  Result analysis பன்னனும் sir...


 முதன்மை அதிகாரி:  Very good. Result குறைந்த தலைமையாசிரியர்களை  கூப்பிடுங்க Result குறைந்ததுக்கு என்ன காரணமுனு  விளக்கம் கேளூங்க  ...... பள்ளில என்னதான் பன்றாங்க இவங்க ....


தலைமை ஆசிரியர்கள்: **ஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙங**..



1 comment:

Post Top Ad