G.O 297 - ஆண்டுதோறும் மாசிமகத் திருவிழா அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து அரசு ஆணை - Date : 10.05.2023 - Asiriyar.Net

Monday, February 12, 2024

G.O 297 - ஆண்டுதோறும் மாசிமகத் திருவிழா அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து அரசு ஆணை - Date : 10.05.2023

 




பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு . அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் கடிதத்தில் , கோயில்களின் நகரமாம் கும்பகோணம் மாநகரில் , தென்பரதக் கும்பமேளா என்று அனைவராலும் அழைக்கப்படும் மாகாமகப் பெருவிழா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்பட்டு வருகிறது என்றும் , குடந்தையில் உள்ள மகாமகத் திருக்குளத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாசிமகத்தன்று சிறப்பாக நடைபெற்று வரும் மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு 12 சைவத் திருக்கோயில்கள் மற்றும் 5 வைணவத் திருகோயில்களின் சுவாமிகள் , 


தீர்த்தவாரி செய்வதற்காக வருகை தருகின்றனர் என்றும் , இப்பதினேழு சுவாமிகளையும் தரிசனம் செய்வதற்காகவும் , மகாமகத் திருக்குளத்தில் , புனித நீராடுவதற்காகவும் ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை புரிகின்றனர் என்றும் , ஆயிரக்கணக்கான பக்தர்கள் தம் முன்னோர்களுக்குத் திதி கொடுக்கவும் செய்கின்றனர் என்றும் , இந்த வருடம் 06.03.2023 அன்று மாசிமகத்திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார். 


மேலும் , இத்தகையப் பெருமை வாய்ந்த மாசிமகத் திருவிழா அன்று உள்ளூர் விடுமுறையாக அறிவிக்க ஆவண செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.


 மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு . அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலித்து , அதனை ஏற்றுக் கொண்டு . அவ்வாறே ஆண்டுதோறும் மாசிமகத் திருவிழா அன்று தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அரசு ஆணையிடுகிறது.


இந்த உள்ளூர் விடுறை நாட்கள் செலாவணி முறிச் சட்டம் , 1881 ( Under Negotiable Instruments Act , 1881 ) ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் , உள்ளூர் விடுமுறை அறிவிக்கும்போது , மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும் , சார்நிலைக் கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என அறிவிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.


Click Here to Download - G.O 297 - Pdf



No comments:

Post a Comment

Post Top Ad