அரசு ஊழியர் தேர்வு அட்டவணை வெளியீடு - Asiriyar.Net

Wednesday, July 7, 2021

அரசு ஊழியர் தேர்வு அட்டவணை வெளியீடு

 






அரசு ஊழியர்களின் துறை சார்ந்த வாய்மொழி தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.



டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு: 


அரசு ஊழியர்களுக்கு, டிசம்பரில் நடக்கும் துறை தேர்வுகள், பிப்., 14 முதல், 21 வரை நடந்தன. இதில், இரண்டாம் நிலை, மொழி எழுத்து தேர்வு முடிவுகள், ஏப்ரல், 9ல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை மொழி தேர்வுகளுக்கான வாய்மொழி தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், வரும், 7ம் தேதி முதல், 27ம் தேதி வரை, இந்த தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. தேர்வு மையங்கள் குறித்த விபரங்களை, டி.என்.பி.எஸ்.சி.,யின்,www.tnpsc.gov.inஎன்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.




இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





No comments:

Post a Comment

Post Top Ad