19-ஆம் தேதி காலை 11 மணிக்கு +2 மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்படும்.
22-ஆம் தேதி மதிப்பெண் சான்றிதழை மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
அரசாணை ( நிலை ) எண் .105 பள்ளிக் கல்வித் ( அ.தே ) துறை , நாள் .12.07.2021 - ன்படி , 2020-2021ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள் , 19.07.2021 அன்று காலை 11.00 மணிக்கு வெளியிடப்படுகிறது. பள்ளி மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை கீழ்க்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம் .
மாணவர்கள் , பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவு அனுப்பி வைக்கப்படும்.
மேலும் , பள்ளி மாணவர்கள் 22.07.2021 அன்று காலை 11.00 மணி முதல் www.dge.tn.gov.in , www.dge.tn.nic.in என்ற இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தங்களுக்கான மதிப்பெண் பட்டியலை தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.