வணக்கம்.
நான் பட்டதாரி ஆசிரியராக அரசு உயர்நிலைப்பள்ளியில் வேலை செய்து வருகிறேன்.
அரசு அலுவலர்களின் ஓய்வு பெறும் வயது 60 வரை நீட்டிக்கப்பட்டதை மீண்டும் 58 வயதாக குறைக்க தங்கள் அரசு திட்டமிட்டுக்கொண்டிருப்பதாக சில வாட்ஸ் ஆப் குழுக்களில் செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது.
என்னைப்போன்று பலர் 45வயதிற்கு மேற்பட்டவர்கள் 2006-2011 திமு கழக ஆட்சியில் பணி மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் பெற்று பட்டதாரி ஆசிரியராகப்பணி புரிந்து வருகிறோம். அவர்களில் ஒரு சிலர் 10 ஆண்டுகள் மட்டுமே பணி புரிந்துள்ளனர். இந்த நிலையில் ஓய்வு பெறும் வயதினை 58லிருந்து 60 ஆக உயர்த்தியது எங்களைப் போன்றவர்களுக்கு ஒரு ஆறுதலாக இருந்தது.
இந்நிலையில் ஒரு சில ஊடகங்களும் , ஒரு ஆசிரியர் அமைப்பும் 60 வயது பணி நீட்டிப்பு இளைஞர்களின் வேலை வாய்ப்புக்கு இடைஞ்சலாய் இருக்கிறது என்ற ஒரு செய்தியை வெளியிட்டது.
18/20 வயதில் அரசுப்பணியில் சேர்ந்து 40 வருடங்களாகியும் அரசுப்பணியில் உள்ளோர்கள் பணியில் இருக்கும் பொழுது 10 வருடங்கள் மட்டுமே அரசுப்பணியில் இருக்கும் நாங்கள் எப்படி இளைஞர்களுக்கு இடைஞ்சலாக இருக்க முடியும்.
எனவே ஓய்வு பெறும் வயதினைக்கணக்கிடும் பொழுது தயவு செய்து அவர்களின் பணி நியமனம் செய்யப்பட்ட காலத்தினையும் கருத்தில் கொண்டு மத்திய அரசில் உள்ளது போல மாநில அரசிலும் 30/33 ஆண்டு பணிக்காலம் அல்லது 60 வயது, என்று கணக்கில் எடுத்துக்கொண்டால் என்னைப்போன்று தாமதமாக அரசுப்பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓரளவு பலன் கிடைக்கும்.
இது போல் செய்தால் யாருக்கும் பாதிப்பிருக்காது. இளைஞர்களின் எதிர்காலமும் காணல் நீராகாது.
எனவே முதல்வர் அவர்கள் இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக செயல்பட்டு எங்களின் வாழ்வில் ஒளி தீபம் ஏற்றி வைக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன். மேலும் எங்களின் நீண்ட கால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அறிவித்து அரசூழியர் அனைவரின் வாழ்விலும் ஒளி தீபம் ஏற்றி வைக்குமாறு தங்கள் சமூகத்தினை மிகவும் பணிவுடன் வேண்டுகிறேன்.