நாகப்பட்டினம் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்
ந.க.எண் : 5358/ஆறு 2019, நாள். 09.07.2021
பொருள்: | தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி - நாகப்பட்டினம் வருவாய் மாவட்டம் - அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் - ஆசிரியர்கள் மாற்றுப்பணியில் பணிபுரிய ஆணை வழங்கியமை - இரத்து செய்து ஆணை வழங்குதல் - சார்பு.
பார்வை : 1 இவ்வலுவலக செயல்முறைகள்
2 சென்னை 06, தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) அவர்களின் செயல்முறைகள் நகாண் 028753/43/M1/2021 நாள் 23.06.2021
நாகப்பட்டினம் வருவாய் மாவட்டத்தில் உள்ள அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் மாற்றுப்பணியில் பணிபுரிய ஆசிரியர்களுக்கு ஆணை இவ்வலுவலகத்தால் வழங்கப்பட்டது. பார்வை 2-ல் காணும் செயல்முறைகளின்படி மாற்றுப்பணியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், மற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரது மாற்றுப்பணியை இரத்து செய்ய ஆணை வழங்கப்பட்டுள்ளது. எனவே நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் மாற்றுப்பணியில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் மாற்றுப்பணி ஆணை இதன் மூலம் இரத்து செய்யப்படுகிறது.
மாற்றுப் பணியில் தெரிவித்து பணிவிடுவிப்பு செய்திட சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் ஆசிரியர் பணிவிடுப்பு மற்றும் பணி ஏற்ற விவரத்தினை உடன் இவ்வலுவலகத்திற்கு தெரிவித்திடவும் சார்ந்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.