அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் சொத்து விபரங்களை சமர்ப்பிக்கும்படி, நிர்வாகங்கள் அறிவுறுத்தி உள்ளன.அரசு போக்குவரத்து கழக பணியாளர்களின் பணி பதிவேட்டில், அவர்களின் சொத்து விபரங்களை பதிவு செய்வது வழக்கம்.
அந்த வகையில், ஒவ்வொரு போக்குவரத்து கழகமும், அந்தந்த மண்டலத்துக்கு உட்பட்ட பணியாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.அதில், கிளைகள், மண்டல அலுவலக பிரிவுகளில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களின் சொத்து விபரங்களை உடனடியாக இணைத்து, வரும் 31ம் தேதிக்குள், அந்தந்த தலைமை அலுவலகங்களில் சமர்ப்பிக்கும் படி உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment