செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் சீயாலங்கொல்லை ஊராட்சி தொடக்கப்பள்ளியில், சத்துணவு திட்டத்தின் கீழ் உலர் உணவுப் பொருட்கள் மற்றும் முட்டைகள் வழங்கப்படுகிறது. இதில் முறைகேடு நடப்பதாக கலெக்டருக்கு புகார் வந்தது. இதையடுத்து அதிகாரிகள், நேரடியாக விசாரணை நடத்தினார்.
அதில், சத்துணவு மையத்தில் உள்ள உலர் உணவுப் பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவின்படி வழங்கப்படாமல் முறைகேடு செய்தது தெரிந்தது. தொடர்ந்து, முறைகேட்டில் ஈடுபட்ட சீயாலங்கொல்லை தொடக்கப்பள்ளியில் கூடுதல் பொறுப்பு வகிக்கும் மலாலிநத்தம் தொடக்க பள்ளி சத்துணவு அமைப்பாளர் சந்திரவேலனை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.