ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையரிடமிருந்து பெறப்பட்ட நேர்முக கடிதத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையினரால் பெண்கல்வி ஊக்குவிப்பு திட்டத்தின்கீழ் 100% சேர்க்கை உறுதி செய்யும் நோக்கத்துடன் மாணவிகள் சேர்க்கை செய்திடவும், இடைநிற்றல் ( Drop out ) வீதத்தினை குறைத்திடும் வகையில் ஆதிதிதிராடர் நலத்துறை செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தினை திறம்பட செயல்படுத்த 2020-21 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க/நடுநிலை / உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் 3 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் தகுதியான மாணவிகள் விவரத்தினை EMIS -ல் பதிவு செய்திட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்ட ஊக்கத் தொகைக்கான பயனீட்டுச் சான்றினை சார்ந்த மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலருக்கு வழங்கிடுமாறும் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கிடுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு: சென்னை, ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையரின்
நேமு கடித ந.க.எண்.12/16303 /2020 நாள் 14.06.2021
(ஓம்)- கா.ரோஸ் நிர்மலா முதன்மைக் கல்வி அலுவலர்
கடலுார்.
பெறுநர் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள், கடலூர் மாவட்டம் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், கடலூர் மாவட்டம் நகல்: அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் - உடன் நடவடிக்கை மேற்கொள்ளும்பொருட்டு
No comments:
Post a Comment