அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம்! என்னென்ன தேவை? எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரங்கள் உள்ளே... - Asiriyar.Net

Monday, July 26, 2021

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம்! என்னென்ன தேவை? எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரங்கள் உள்ளே...

 





அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் சேருவதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, இன்று துவங்குகிறது.பிளஸ், 2 முடித்த மாணவர்கள், அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை பட்டப்படிப்பில் சேர, ஒவ்வொரு கல்லுாரியிலும் விண்ணப்பம் வழங்கப்படும்.



கொரோனாவால் கடந்தாண்டு முதல் நேரடி விண்ணப்ப முறை பின்பற்றப்படுவதில்லை. இதற்கு மாற்றாக, 'ஆன்லைன்' விண்ணப்ப முறையை, தமிழக உயர் கல்வித்துறை கடந்தாண்டு அறிமுகம் செய்தது.


இதன்படி, இன்று முதல், ஆன்லைனில் விண்ணப்ப பதிவுகள் துவங்குகின்றன. www.tndceonline.org மற்றும் www.tngasa.in என்ற, இணையதளங்களில், மாணவர்கள், வரும் ஆக., 10 வரை பதிவு செய்யலாம். மாற்றுச்சான்றிதழ், 10 மற்றும், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், குடும்ப ஆண்டு வருமான சான்று, ஜாதிச் சான்று சிறப்பு ஒதுக்கீடு உள்ளிட்ட சான்றிதழ்கள், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ போன்றவற்றை, 25ம் தேதி முதல், ஆகஸ்ட், 5 வரை பதிவு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


இது குறித்த சந்தேகம் இருந்தால், 044 - 28260098, 2827 1911 ஆகிய போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது


Click Here To Download - Collège Codes - Pdf



Post Top Ad