என் தம்பிப் பசங்கள பக்கத்துல உள்ள கிராமத்து அரசுப் பள்ளியில் அரை மனசோடதான் சேர்த்துட்டு வந்திருக்கேன். அடிப்படை வசதிகள் போதுமானதா இல்ல. இன்னிக்குக் கழிப்பறையும் மின்விசிறியும் இல்லாத வீடுகளே கெடையாது. அந்த வசதிகூட பள்ளிக்கூடத்துல இல்லைன்னா, பெண் பிள்ளையைச் சேர்க்கச் சங்கடம் வரத்தானே செய்யும்?
1 முதல் 8 வகுப்பு வரை உள்ள பள்ளிக்கூடத்துல மொத்தமே 5 ஆசிரியர்கள் மட்டும் இருந்தா, எப்படி எல்லாப் பாடங்களையும் நடத்த முடியும்? ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியரை நியமிச்சாதான். பெற்றோர்கள் தயங்காமல் பிள்ளைகளைச் சேர்ப்பாங்க. இல்லாட்டி, மறுபடியும் வருமானம் வரத் தொடங்குனதும், பிள்ளைங்கள தனியார் பள்ளியிலயே சேர்த்திடுவாங்க.
No comments:
Post a Comment