அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியும் உள்ளது. ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை இருப்பவர்கள் எண்ணிக்கையில் குறைவு என்றாலும் ஆறாம் வகுப்புக்கு மேல் அரசு பள்ளிகளில் ஆங்கில வழியில் கற்பவர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கின்றனர்
.இவர்கள் பெரும்பாலும் ஐந்தாம் வகுப்பு வரை அருகில் இருக்கும் தனியார் பள்ளிகளில் ஆங்கில வழியில் படித்து விட்டு அதற்குமேல் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை நாடியவர்கள்.இதுவரை இவர்களுக்கான பாடங்கள் எப்படி நடத்தப்படும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் வரவில்லை. கல்வித் தொலைக்காட்சியின் பாடங்களையே கவனிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
ஆங்கிலத்தில் இருக்கும் பாடங்களை தமிழில் விளக்கம் சொல்வதாகவே, இவ்வளவு நாள் படித்திருந்தாலும், பெயர்ச்சொற்கள் பாடங்களில் வரும் சிறப்பு குறியீட்டு பெயர்கள் போன்றவற்றை ஆங்கிலத்தில் சொல்லியே பழகியவர்கள், துாய தமிழில் இருக்கும் சொற்கள் புரியாமல் தடுமாறுகின்றனர்.
உதாரணமாக, கணிதத்தில் சார்புகள் என்றொரு பாடம், ஆங்கிலத்தில் அது, 'பங்ஷன்ஸ்' என்ற பெயரில் இருக்கிறது. அறிவியலில் ஒளியியல் ஆங்கிலத்தில், 'ஆப்டிக்ஸ்' என்று வருகிறது. எந்த பாடம் நடத்தப்படுகிறது என்றே பார்ப்பவர்களுக்கு புரிவதில்லை.அல்ஜீப்ரா, ஈக்குவேஷன், வேரியபிள், கான்ஸ்டன்ட் இப்படிப் படித்துவிட்டு இயற்கணிதம், சமன்பாடு, மாறி, மாறிலி என்றால் மாணவர்கள் குழம்பி விடுகின்றனர்.எனவே, இது விஷயத்தில், கல்வித்துறை ஒரு முடிவு செய்து அறிவிக்க வேண்டும்.புரியாத வார்த்தைகள் -
சில உதாரணங்கள்
சார்புகள் - பங்ஷன்ஸ்ஒளியியல் - ஆப்டிக்ஸ்சமன்பாடு - ஈக்குவேஷன்மாறி - வேரியபிள்மாறிலி - கான்ஸ்டன்ட்