தமிழக பள்ளிகளுக்கு மத்திய அரசின் சான்று கட்டாயம்! - Asiriyar.Net

Monday, July 12, 2021

தமிழக பள்ளிகளுக்கு மத்திய அரசின் சான்று கட்டாயம்!

 





"தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் மத்திய அரசின் 'Fit India Movement' சான்று கட்டாயம். www.fitindia.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து அனைத்து வகை பள்ளிகளும் சான்றிதழ் பெற வேண்டும். மிகக் குறைந்தப் பள்ளிகளே பதிவு செய்துள்ள நிலையில் இது ஏற்புடையதல்ல. பள்ளிகள் ஜூலை 20- ஆம் தேதிக்குள் பதிவு செய்து 'Fit India Movement' சான்று பெற்றாக வேண்டும். பள்ளிகள் சான்று பெறுவதைக் கண்காணித்து அறிக்கைத் தர மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 


மேலும், பள்ளிகள் ஜூலை 20ம் தேதிக்குள் பதிவு செய்து (Fit India Movement) என்ற சான்று கட்டாயம் பெற்றாக வேண்டும் என தெரிவித்துள்ளனர். பள்ளிகள் சான்று பெறுவதை கண்காணித்து அறிக்கை தர மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.





No comments:

Post a Comment

Post Top Ad