இந்திய முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் நாளை முதல் பாஸ்ட் டேக் முறை முழு அளவில் அமலுக்கு வருகின்றது.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் வாகனங்களுக்கான சுங்க கட்டணத்தை பணமாக வழங்குவதை தவிர்த்து ஆன்லைன் முறையில் உடனடியாக பெற்றுக் கொள்வதற்காக பாஸ்ட் டேக் ஸ்டிக்கர்கள் வாகனத்தில் ஒட்டுவதற்காக மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த பாஸ்ட் டேக் முறை நாளை(15.01.2020) முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த நிலையில் இதுவரையில் 30 லட்சத்திற்கும் அதிகமான பாஸ்ட்டேக் ஸ்டிக்கர்களை வழங்கி உள்ளதாக வங்கியாக செயல்படும் பே.டி.எம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 40 சதவீத பாஸ்ட்டேக்குகள் வாகனங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், வருகின்ற மார்ச் மாதத்தில இந்த எண்ணிக்கையை 50 லட்சமாக உயர்த்தவும் இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.