ஏதாவது ஒரு எழுத்தை கொடுத்து, அதிக வார்த்தைகள் எழுதுவோருக்கு, கிரேடு வழங்கப்படும். கணித பாடத்திற்கு, 'பசில்ஸ்' மூலம், விடை கண்டுபிடிப்போம். தேட ஆரம்பித்து விட்டாலே, ஆர்வம் தொற்றி கொள்ளும்.- பெலிசியா ஜெனட் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, செட்டிப்பாளையம்.அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் கொண்டு தான், வகுப்பு நடத்துகிறேன். வட்டத்தின் சுற்றளவு கண்டுபிடிக்க, வட்டமான ஏதாவது ஒரு பொருள் போதும்.
அதை அளவிட்டு எழுதினால் தான், வாய்ப்பாடு மறக்காது.- கோமதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ராக்கிபாளையம்.வார்த்தை விளையாட்டு நடத்துகிறோம். இதில் வெற்றி பெற, தமிழ் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தனர். கேள்வி கேட்கவே அதிக நேரம் ஒதுக்குகிறோம். பாடத்தை நடத்திய பின், அதுசார்ந்த, சாராத கேள்விகளை கேட்கலாம்.
மார்க் அடிப்படையில், ஏ,பி,சி,டி. கிரேடில் தலா ஒரு மாணவர் கொண்ட குழு உருவாக்கி, வினாடி-வினா நடத்துகிறோம்.- திருமுருகன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மூலத்துறை.4 விதமான கைத்தட்டல் முறை மூலமாக, மாணவர்களை உற்சாகப்படுத்துவேன். இது, உற்சாகத்தை கொடுப்பதோடு, மூளையையும் சுறுசுறுப்பாக்கும். தவறு செய்தால் அடிப்பதோ, ஒரே பாடத்தை பலமுறை எழுத சொல்லவோ மாட்டேன்.
மற்ற குழந்தைகள் விளையாடும் போது, வேடிக்கை பார்க்க வைப்பதுதான் தண்டனை.- ஜெயந்தி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சின்னமேட்டுப்பாளையம்.அந்த 40 நிமிடங்கள்!ஒரு வகுப்புக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நேரம் 40 நிமிடங்கள் மட்டுமே. இந்த 40 நிமிடங்களுக்குள் மாணவர்களை படிக்க வைக்க, ஆசிரியர்கள் படும் பாடு குறித்து, 'வாட்ஸ்-ஆப்' குழுவில் பரவும் ஒரு தகவல் வைரலாகி, ஆசிரியர்களை 'அதானே' போட வைத்துள்ளது!ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை ஒரு பார்வையாளராக அல்லாமல் பங்கேற்பாளராக நினைத்து பாருங்கள். அப்போது தான், கற்பித்தலில் உள்ள கஷ்டங்கள் தெரியும்.40 மாணவர்களை அமைதியாக உட்கார வைப்பதே பெரிய சாதனை.
அதற்கு கொஞ்சம் அதட்ட வேண்டும். அன்பாக பேச வேண்டும். கொஞ்சம் கெஞ்ச வேண்டும். இதில் ஏதாவது ஒன்றை அதிகம் செய்தால் பிரச்னை துவங்கிவிடும்.தற்போது தனிக்குடும்பங்களாகி விட்டதால், பள்ளியில் இருந்து வீடு திரும்பும் குழந்தையின், முகம் சற்று வாடினாலே, பள்ளிக்கு தேடி வந்து விடுகின்றனர் பெற்றோர்.
இதற்காக, அதட்டாமல் இருந்தால், மாணவர்களை கட்டுப்படுத்த முடியாது.ஒரு பாடவேளைக்கான நேரம், 40 நிமிடங்கள். இதில் உட்கார வைத்து, முந்தைய நாள் பாடத்தை நினைவுப்படுத்த, 15 நிமிடங்கள். மீதமுள்ள நேரத்தில் வகுப்பு கையாள்வதோடு, தொடக்கப்பள்ளி ஆசிரியராக இருந்தால், எழுத்து, வாசிப்பு பயிற்சியும் அளிக்க வேண்டும்.பெற்றோர், தலைமையாசிரியர், கல்வித்துறை அதிகாரிகளை திருப்திப்படுத்துவது சாதாரணமானதல்ல. ஒரு பொறியாளர் மாதிரி வேலையை செய்து விட்டு, கடந்து விட முடியாது. கல்வியோடு ஒழுக்கம், தன்னம்பிக்கை உள்ளிட்ட வாழ்வியல் நெறிகளை கற்பிக்கும் ஆசிரியர்களை ஒவ்வொரு பெற்றோரும் புரிந்து கொள்ளும் போதுதான், மாணவர்களின் எதிர்காலம் சிறப்படையும்.ஆகவே... எங்களை புரிந்து கொள்ளுங்கள் என்று நீள்கிறது அந்த வாட்ஸ் ஆப் பதிவு!