/
மார்ச் | ஏப்ரல் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணாக்கரின் பெயர் பட்டியலை தயாரிப்பதற்கு 16 . 12 . 2019 முதல் 30 . 12 . 2019 வரை கால அவகாசமும் , அதனைத் தொடர்ந்து 04 . 01 . 2020 வரை கால நீட்டிப்பும் வழங்கப்பட்டது .
மார்ச் | ஏப்ரல் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பெயர் பட்டியலை பதிவேற்றம் செய்யாமல் இது வரை 100 - க்கும் மேற்பட்ட பள்ளிகள் இருப்பதாக தெரியவருவதால் , சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியரை தொடர்பு கொண்டு 10 . 01 . 2020 முதல் 13 . 01 . 2020 - க்குள் பெயர் பட்டியலை தயாரிக்கும் பணியினை விரைந்து முடிக்குமாறு , இணைப்பில் உள்ள பள்ளிகளுக்கு அறிவுறுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது .
இணைப்பில் உள்ள பள்ளிகள் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணியினை முடித்திருப்பின் அப்பள்ளிகள் கீழ்க்காணும் பட்டியலில் பூர்த்தி செய்து உடன் இவ்வலுவலக மின்னஞ்சலில் அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.