பிப்ரவரியில வங்கிகள் 12 நாட்களுக்கு இயங்காது! 29 நாள்ல 12 நாட்கள் விடுமுறையா? - Asiriyar.Net

Saturday, January 18, 2020

பிப்ரவரியில வங்கிகள் 12 நாட்களுக்கு இயங்காது! 29 நாள்ல 12 நாட்கள் விடுமுறையா?





இந்த 2020ம் வருடம் நெக்ஸ்ட் மன்த் அதாவது பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 29 நாட்கள் உள்ளன. அதில், வங்கிகள் (Banks) சுமார் 12 நாட்கள் செயல்படாது-ன்னு தகவல் வந்துருக்கு. அத்தகைய நிலையில் உங்கள் அன்றாட வாழ்க்கையில் நேரடி தாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வங்கிகளின் நீண்ட வேலைநிறுத்தம் மற்றும் தேசிய விடுமுறை காரணமாக, அடுத்த மாதத்தின் பணம் சம்பந்தமாகக முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்வது நல்லது.

12 நாட்களுக்கு வங்கிகள் ஏன் மூடப்படும்?
சம்பள உயர்வு கோரி வங்கி ஊழியர்கள் சங்கங்கள் பிப்ரவரி 1, 12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளன. இது தவிர, மாதத்தில் 6 விடுமுறைகள் (இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும்) உள்ளன. இது தவிர, பிப்ரவரி 21 அன்று மகாசிவராத்திரிக்கு அரசு விடுமுறை உண்டு. மொத்தத்தில், அடுத்த மாதம் முழுவதும் 12 நாட்களுக்கு வங்கி தொடர்பான எந்த வேலையும் நடக்காது.



Post Top Ad