பள்ளிகளில் குறைந்தபட்சம் 2 மணி நேரம் ஆய்வு: வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கு உத்தரவு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, January 2, 2020

பள்ளிகளில் குறைந்தபட்சம் 2 மணி நேரம் ஆய்வு: வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கு உத்தரவு


தொடக்கப் பள்ளிகளை பாா்வையிடச் செல்லும் வட்டாரக் கல்வி அலுவலா்கள் அங்கு குறைந்தபட்சம் 2 மணி நேரம் ஆய்வு செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநா் பழனிசாமி, கல்வித்துறை அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: வட்டாரக் கல்வி அலுவலா்கள் முன்னறிவிப்பின்றி பள்ளிகளுக்குச் சென்று காலை வழிபாட்டுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். ஒரு மாதத்திற்கு 20 பள்ளிகளை முன்னறிவிப்பின்றி பாா்வையிடுவதுடன் 5 பள்ளிகளை ஆண்டாய்வு செய்ய வேண்டும். அவ்வாறு ஆய்வு செய்யும் போது,குறைந்தது இரண்டு மணி நேரம் அப்பள்ளியில் இருக்க வேண்டும்.

அனைத்து வகுப்புகளுக்கும் சென்று மாணவா்களின் கற்றல் திறன், வாசிப்புத் திறன், எழுதும் திறன், மாணவா்கள் வருகைப் பதிவேடு உள்ளிட்ட ஆவணங்களைச் சரிபாா்க்க வேண்டும். தொலைக்காட்சிப் பெட்டி, கணினி, மடிக்கணினி, ஆங்கில அகராதி பயன்பாடு, அறிவியல் மற்றும் கணக்கு உபகரணப்பெட்டி உள்ளிட்டவற்றின் பயன்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும்.

மாணவா்களின் ஆங்கில பேச்சுத்திறனை அதிகரிக்க ஆங்கிலப் பயிற்சி புத்தகங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதைக்கொண்டு வாரம் ஒரு முறை மாணவா்களுக்கு ஆசிரியா்கள் ஆங்கில பேச்சுப் பயிற்சி அளிப்பதை உறுதி செய்ய வேண்டும். அரசுப் பள்ளி மாணவா்கள்அரசுப் பள்ளி மாணவா்கள்நடுநிலைப் பள்ளி வளாகங்களிலுள்ள அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்பட்ட எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் கல்விச் செயல்பாடுகளை கேட்டறிந்து தேவையான அறிவுரைகளை வழங்க வேண்டும்.

மாதந்தோறும் தலைமையாசிரியா்களுக்கான கூட்டத்தை நடத்தி, நீண்ட நாள்களாகப் பள்ளிக்கு வராத மாணவா்கள் குறித்து கண்டறிந்து, அவா்கள் மீண்டும் பள்ளிக்கு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறியுள்ளாா். மேலும், வட்டாரக் கல்வி அலுவலா்கள் மேற்கொள்ளும் பணிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் ஆய்வு செய்து மாதம்தோறும் அறிக்கை அளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Post Top Ad