அரசுப் பள்ளி தலைமையாசிரியர் பணி நீக்கம் (Removed From Service) - பள்ளிக்கல்வித்துறை அதிரடி - Asiriyar.Net

Saturday, April 6, 2024

அரசுப் பள்ளி தலைமையாசிரியர் பணி நீக்கம் (Removed From Service) - பள்ளிக்கல்வித்துறை அதிரடி

 

மது போதையில் இருந்த தலைமை ஆசிரியர் பணியிலிருந்து விடுவிப்பு.(removed from service)


தருமபுரி மாவட்டம் , தருமபுரி ஒன்றியம் , மாரவாடி , ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வரும் திரு.எம்.குணசேகரன் என்பவர் பள்ளி வேலை நேரத்தில் மதுபோதையில் இருந்தது மாவட்டக் கல்வி அலுவலர் ( தொடக்க கல்வி ) அவர்களின் பள்ளிபார்வையின் போது கண்டறியப்பட்டது . இவரை மருத்துவ பரிசோதனை உட்படுத்தி மருத்துவ சான்று பெறப்பட்டது.


 இவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு விசாரணை அலுவலரின் விசாரணை அறிக்கை மற்றும் மருத்துவரின் சான்றுப்படியும் இவர் மது அருந்தி இருந்தது நிரூபணமானது . தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டது.


 இதனால் மேற்கண்ட தலைமையாசிரியரை தருமபுரி மாவட்ட கல்வி அலுவலரால் ( தொடக்கக் கல்வி ) இன்று ( 05.04.2024 ) பணியிலிருந்து விடுவித்து ஆணை வழங்கப்பட்டது .


எனவே, மாவட்ட கல்வி அலுவலர்(தொடக்கக் கல்வி) மான்விழி வெள்ளிக்கிழமை (ஏப். 5) தலைமையாசிரியர் குணசேகரனை பணியிலிருந்து விடுவித்ததற்கான ஆணையை அவரிடம் வழங்கினார். இந்நிகழ்வு தருமபுரி மாவட்ட கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Post Top Ad