தமிழகத்தில் தொகுதி வாரியான வாக்குப்பதிவு நிலவரம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, April 19, 2024

தமிழகத்தில் தொகுதி வாரியான வாக்குப்பதிவு நிலவரம்

 
தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளது. இன்னும் சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். 


தமிழகத்தில் அதிகபட்சமாக, கள்ளக்குறிச்சியில் 75.67%, தருமபுரியில் 75.44%, சிதம்பரத்தில் 74.87% வாக்குகள் பதிவாகி உள்ளன. குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியுள்ளார்.


சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளது. 


இன்னும் சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். தமிழகத்தில் அதிகபட்சமாக, கள்ளக்குறிச்சியில் 75.67%, தருமபுரியில் 75.44%, சிதம்பரத்தில் 74.87% வாக்குகள் பதிவாகி உள்ளது. குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35%, தென் சென்னையில் 67.82%, மதுரையில் 68.98%, வட சென்னையில் 69.26% வாக்குகள் பதிவாகி உள்ளது.


விளவங்கோடு இடைத்தேர்தல் நிலவரம் இன்னும் சிறிது நேரத்தில் வெளியிடப்படும். இந்த எண்ணிக்கை சதவீதத்தில், தபால் வாக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இந்த சதவீத எண்ணிக்கை வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மட்டுமே.


கடந்த 2019 தேர்தலில் 7 மணி நிலவரப்படி கிட்டத்தட்ட 69 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. அத்துடன் இதை ஒப்பிடுகையில் இந்த வாக்கு சராசரி நன்றாகவே இருக்கிறது. பல இடங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த காரணத்தால், பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையிலான நேரத்தில் அதிகமானோர் வாக்களிக்க வந்துள்ளனர். 


6 மணிக்குள் வந்த பலரும் ஆர்வத்துடன் டோக்கன் பெற்றுக்கொண்டு வாக்களிக்க காத்திருந்தனர். நாளை பகல் 12 மணிக்கு துல்லியமான வாக்குப்பதிவு சதவீதம் வெளியாகும்.


தேர்தல் ஆணையத்தில் இருந்து ஓர் அறிவுறுத்தல் வந்துள்ளது. அடுத்த கட்டமாக கேரளா, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் மட்டும் பாதுகாப்பு படையினர் சோதனை தொடரும். மற்ற இடங்களில் பாதுகாப்பு படையினரை திரும்ப பெற உள்ளோம்” என்று அவர் கூறினார். தொகுதி வாரியான வாக்குப்பதிவு - இரவு 7 மணி நிலவரம்:


கள்ளக்குறிச்சி - 75.67%

தருமபுரி - 75.44%

சிதம்பரம் - 74.87%

பெரம்பலூர் - 74.46%

நாமக்கல் - 74.29%

கரூர்- 74.05%

அரக்கோணம் - 73.92%

ஆரணி - 73.77%

சேலம்- 73.55%

விழுப்புரம்- 73.49%

திருவண்ணாமலை - 73.35%


வேலூர் - 73.04%

காஞ்சிபுரம் - 72.99%

கிருஷ்ணகிரி - 72.96%

கடலூர் - 72.40%

விருதுநகர் -72.29%

பொள்ளாச்சி -72.22%

நாகப்பட்டினம் - 72.21%

திருப்பூர் - 72.02%

திருவள்ளூர் - 71.87%

தேனி - 71.74%

மயிலாடுதுறை - 71.45%

ஈரோடு - 71.42%

திண்டுக்கல் - 71.37%

திருச்சி -71.20%

கோவை - 71.17%

நீலகிரி - 71.07%

தென்காசி - 71.06%

சிவகங்கை -71.05%

ராமநாதபுரம் -71.05%

தூத்துக்குடி - 70.93%

திருநெல்வேலி - 70.46%

கன்னியாகுமரி - 70.15%

தஞ்சாவூர்- 69.82%

ஸ்ரீபெரும்புதூர் - 69.79%

வட சென்னை - 69.26%

மதுரை - 68.98%

தென் சென்னை -67.82%

மத்திய சென்னை - 67.35%

மொத்தம் - 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளது.Post Top Ad