கோடை விடுமுறை - குழந்தைகளை மகிழ்ச்சியாக்க பெற்றோர்கள் செய்ய வேண்டியது? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, April 20, 2024

கோடை விடுமுறை - குழந்தைகளை மகிழ்ச்சியாக்க பெற்றோர்கள் செய்ய வேண்டியது?

 



கோடை விடுமுறை வந்தாலே குழந்தைகளுக்குக் குதூகலம் தான். அதே சமயம் பெற்றோர்களுக்கு வழக்கத்தை விட வேலைப்பளு மிகவும் அதிகமாக இருக்கும். இதோடு  குழந்தைகளை அதிக நேரம் சமாளிப்பது என்பது ஒவ்வொரு பெண்களுக்கும் பெரும் சவாலாக அமையும். 


இதனால் சில நேரங்களில் மிகவும் கடுப்பாகி பெற்றோர்கள் குழந்தைகளைத் திட்டிவிடுவார்கள். இந்த சூழலை மாற்றவும், குழந்தைகளை கோடை விடுமுறை நாட்களில் மகிழ்ச்சியுடன் வைத்திருக்க நீங்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.


தெளிவான எதிர்பார்ப்புகளை அமைக்கவும்:

குழந்தைகளின் விடுமுறை நாட்களில் கூட என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பெற்றோர்கள் அழைப்பில் இருக்கும்போது அல்லது பிஸியாக வேலை செய்யும் போது என்ன செய்ய வேண்டும் என்பதை பெற்றோர்கள் குழந்தைகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இது போன்ற விஷயங்களைக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கும் போது எந்த சூழலிலும் அவர்கள் பிஸியாக இருப்பார்கள். இதுவே அவர்களை மகிழ்ச்சியாக்க உதவியாக இருக்கும்.


விளையாட்டு அறையை அமைக்கவும்:

குழந்தைகள் விளையாடுவதற்கு பிரத்யேக இடத்தைக் கொண்டிருக்கும் போது கோடை விடுமுறைகள் பெற்றோருக்கு மிகவும் சுலபமாக அமையும் .குழந்தைகள் தங்கள் பொம்மைகளுடன் எந்தவித குறுக்கீடுகள் இல்லாமல் விளையாடக்கூடிய பாதுகாப்பான இடத்தைத் தேர்வு செய்யுங்கள். வீட்டிற்குள்ளே விளையாடுவதற்கு ஏற்ற இடங்களை அமைக்கும் போது எல்லையற்ற சந்தோஷத்தை நிச்சயம் குழந்தைகள் அடைவார்கள்.


கோடைகால இலக்குகளை அமைக்கவும்:

கோடையில் தங்கள் குழந்தைகளுடன் அடைய விரும்பும் குறிப்பிட்ட இலக்குகளை பெற்றோர்கள் சிந்திக்கலாம். எதிர்கால நலன்களைக் கருதி குழந்தைகளுக்கு ஓவியம், கராத்தே, சிலம்பம், தட்டச்சு, கணினி பயிற்சி போன்ற விஷயங்களைக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கவும். இது குழந்தைகளின் அறிவாற்றலை மேம்படுத்துவதோடு எதிர்காலத்திற்கு ஏதாவது ஒரு வகையில் பயனுள்ளதாக அமையும். 


குழந்தைகள் கவனிப்பு:

நம் நாட்டில் நடக்கும்  விஷயங்களைப் பற்றி சிறு வயதில் இருந்தே குழந்தைகள் தெரிந்துக் கொள்ள வேண்டும். எனவே அதற்கு ஏற்றார் போல் விளையாட்டின் மூலமாக குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க மறந்து விடாதீர்கள்.


சுற்றுலா அழைத்துச் செல்லுதல்:

குழந்தைகள் என்ன தான் வீட்டில் இருந்தப்படியே சில மகிழ்ச்சித் தரக்கூடிய விஷயங்களை மேற்கொண்டாலும் சுற்றுலா என்றால் நிச்சயம் குழந்தைகளுக்கு பெரும் மகிழ்ச்சி தான். எனவே குழந்தைகளுக்குப் பிடித்த அல்லது குளுமையான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் போது பெரும் சந்தோஷத்தை அடைவார்கள். இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெற்றோர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.


இது போன்ற விஷயங்களை நீங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டாலே நிச்சயம் கோடை விடுமுறையை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.



Post Top Ad