அன்பிற்குரிய இனிய ஆசிரிய உறவுகளே! வணக்கம். அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே உங்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்
தாங்கள் தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டிருந்தால் தயவுசெய்து இரண்டு நிமிடங்கள் ஒதுக்கி இதை வாசிக்கவும்.
தேர்தல் பணியை பற்றி எண்ணற்ற ஆலோசனைகள் காணொளி காட்சிகள் இணையத்தில் பரவிக்கிடக்கின்றன.
ஆனால் எனது ஒரே ஒரு அறிவுரை தேர்தல் முடிந்து 6ஆம் தேதி இரவு தேர்தல் பணி முடிந்து இரு சக்கர வாகனத்தையோ நான்கு சக்கர வாகனத்தையோ தாங்களே ஓட்டிவந்து தங்கள் வீடு நோக்கி பிரயாணம் செய்ய வேண்டாம் என்பதே எனது பணிவான வேண்டுகோள்.
18 ஆம் தேதி இரவு இடத்தில் உறக்கம் வராமல் சிரமப்பட்டு இருப்போம். தேர்தல் நாளன்று அதிகாலை 4 மணிக்கு எழுந்து மாதிரி வாக்கெடுப்புக்கு தயார் செய்து அதைத் தொடர்ந்து 11 மணி நேரம் இடைவிடாமல் வாக்கெடுப்பு நடத்தி பின்பு மேலும் அவற்றைப் தயார் செய்து மண்டல அலுவலரிடம் ஒப்படைக்கும் வரை இடைவிடாது உழைத்து இருப்போம்.
நமது உடலும் கண்களும் எவ்வளவு களைத்துப் போய் இருக்கும் என்பது நமக்கே தெரியாது.
இதன் பிறகு நாம் அவசரஅவசரமாக வீடு நோக்கி நமது வாகனத்தை நாமே ஓட்டிச் செல்லும்போது நாமோ அல்லது நம்மைப் போல் தேர்தல் பணி முடித்து எதிரில் வருபவரோ ஒரு நொடி கண்ணசந்தால் போதும் என்ன நடக்கும் என்பது தாங்கள் அறிந்ததே.
இதை தவிர்ப்பதற்கு ஒரே வழி வாக்குப்பதிவு எந்திரங்களை மண்டல அலுவலரிடம் ஒப்படைத்த பிறகு குறைந்தபட்சம் நான்கு மணி நேரமாவது வாக்குச்சாவடியில் தூங்கிவிட்டு ஓய்வெடுத்த பின் வாகனங்களை ஓட்டிச் செல்லலாம். மூட்டைப் பூச்சிக் கடிக்கும் கொசு கடிக்கும் பயந்து உயிரை பணயம் வைக்காமல் இருப்பது புத்திசாலித்தனம்.
நான்கு மணி நேரம் தாமதமாக வீட்டுக்கு செல்வதால் எதையும் நாம் பெரிதாக இழந்து விடப் போவதில்லை.
இப்போதே இந்த மனநிலையை நீங்கள் உருவாக்கிக் கொள்ளுங்கள். நாம் சிங்கம் புலி போன்ற கொடிய விலங்குகளுடன் தேர்தல் பணியாற்ற போவதில்லை நம்மை போல ஒரு ஆசிரியரிடம் அல்லது அரசு ஊழியர் உடன் தான் பணியாற்ற போகிறோம் என்பதை முதலில் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
அரைமணி நேரத்தில் வீட்டுக்கு சென்றால் நிம்மதியாக உறங்கலாம் என்ற எண்ணமே பெரும்பாலான விபத்துகளுக்கு காரணமாக அமைகிறது. அரை மணி நேர பயணத்தில் ஒரு நொடி தடுமாற்றம் அல்லது உறக்கம் நமது வாழ்வையே சிதைத்துவிடும்.
தேர்தல் பணி ஆற்றியவர் வாகனத்தை இயக்க
ஒரே வாகனத்தில் வந்த நண்பர்கள் இரவிலேயே பயணம் செய்ய தயவுசெய்து ஊக்குவிக்க வேண்டாம்.
கடந்த தேர்தல்களில் நானும் அவசரப்பட்டு வாகனம் ஓட்டி வந்து எனக்கு முன்பு இருசக்கர வாகனங்களில் வந்த நண்பர்கள் விபத்தை சந்தித்து அதனால் ஏற்பட்ட இழப்பை சரி செய்ய முடியாமல் இன்று வரை அவர்களும் அவர் குடும்பத்தாரும் அனுபவித்து வருவதை கண்கூடாக பார்ப்பதனால் தான் இந்த பதிவு.
ரியல் வாழ்வில் ரீவைண்ட் கிடையாது ஆசிரியர் உறவுகளே
என்றும் ஆசிரியர் நலனில் நாளை அனைவரும் நம் நாட்டின் புனிதப் பணிக்குச் செல்கிறோம். எளிமையாகச் செல்லுங்கள். பொன் நகைகள் அதிகம் வேண்டாம். புன்னகைய மட்டுமே முகத்தில் கொண்டு செல்லுங்கள்.
செல்லும் இடம் புதிய இடம். தொடர்பில்லாத பேச்சைத் தவிருங்கள். உங்கள் மனதில் உள்ள விருப்பு, வெறுப்புகளை வீட்டில் விட்டுச் செல்லுங்கள். அரசியல் பேச வேண்டாம். நமக்குத் தரப்பட்ட புனிதப் பணியை மன விருப்போடு செய்வோம்.
செல்லும் இடம் குக்கிராமமாகவும் இருக்கலாம். எனவே பிரட் பாக்கெட், பேரீட்சை, உலர் பருப்புகள் போன்றவற்றை உடன் கொண்டு செல்லுங்கள். வாட்டர் பாட்டில் அவசியம். வாக்குச்சாவடிக்கு தண்ணீர் கேன் BLO மூலம் ஏற்பாடு செய்து கொள்ளவும். எளிய பருத்தி உடைகளை தேர்வு செய்யுங்கள். கோடை வெயிலை இதமாக எதிர்கொள்ள முன்வாருங்கள்.வாக்குப் பதிவு மையத்தில் அமைதியும், பொறுமையும் உங்களை வெற்றிகரமான தலைமையாளராக முன்னிறுத்தும்.
தேவையான மருந்து, மாத்திரைகள் எடுத்துச் செல்ல மறக்கவேண்டாம். மையத்தில் அலுவலர்கள் அனைவரும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளுங்கள். பெண் ஆசிரியர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கவும். பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்க. முடிந்த வரை வாக்குச்சாவடியிலேயே தங்குவது நலம்..
குக்கிராமப் பகுதிகளில் உணவினைப் பகிர்ந்து கொள்ளுங்கள். வாக்குப் பதிவின் போது தவறு நேரா வண்ணம் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள். உள்ளூர் மக்களுடன் இணக்கமான நேர்மையுடன் நட்புப் பாராட்டுங்கள். இந்திய கிராமங்கள் உயிர்ப்பும், உணர்வும் உள்ளவை. அம்மக்கள் நமக்கு நிச்சயம் தேவையான உதவிகளை வழங்குவர்.
முதல் நாளே வாக்குச்சாவடி முகவர்களை அழைத்து ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பை நல்க கேட்டுக் கொள்வதோடு, mock poll நடத்த உரிய நேரத்தில் வரச் சொல்லுங்கள்.வயதான பெரியோர், உடல் ஊமுற்றோர், குழந்தைகளோடு வரும் தாய்மார்கள் மேல் பரிவு காட்டுங்கள்.2:1 என்ற விகிதத்தில் பெண்களுக்கு வரிசையில் உரிமை தாருங்கள். வீட்டிலேயே கடைசி நேர வரிசைடோக்கனை தயார் செய்து கொண்டு செல்க.17 - cபடிவம் தயார் செய்து வாய்ப்பிருந்தால் Xerox எடுத்து முகவர்களுக்கு தர முயற்சி செய்யவும்.
வாக்குப்பதிவு முடிந்ததும் பதிவு எந்திரங்களை zonal officers எடுக்கும் வரை பாதுகாக்கவும். பின் அனைவரும் சேர்ந்து ஊருக்குப் புறப்படவும். பெண் ஆசிரியைகளை தனிமையில் விட்டு விட்டு வர வேண்டாம். நாட்டிற்கு நாமாற்றும் கடமையோடு, நமது உடல் நலனும் அவசியம் காக்கப்பட வேண்டும். கவனமுடன் பணி செய்வீர். பணியில் வெற்றியுடன் தேர்தலுக்கு விடை தந்து வீடு வந்து சேர்ந்திடுவீர்.
அன்பு, கனிவு, வெற்றி இதுவே உமது தாரக மந்திரம். இடையூறு ஏதுமின்றி பணி முடித்து வீடு திரும்ப இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன். அன்பு நண்பர்களே
தேர்தல் பணி என்பது முக்கியமானதாக இருந்தாலும் 06.04.2021 இரவு தேர்தல் கருவிகளை ஒப்படைத்தப் பின்பு அனாதைகளாக நடுரோட்டில் விடப்படுவோம் என்பது தெரிந்த்துதான். வீட்டிற்கு விரைந்து செல்லலாம் என்ற நோக்கோடு அறிமுகமில்லாத நபர்களோடு வாகனங்களில் செல்வதை தவிருங்கள். வண்டிகளை வேகமாக ஓட்டுவதையும், ரயில் தண்டவாளங்களை கடப்பதையும் தவிர்த்து விடவும். இரவு நேரத்தில் சாலைகளை கவனமாக கடந்து உங்களை எதிர் நோக்கி காத்துக் கிடக்கும் குடும்பத்தாரை சென்று அடையுங்கள். நமக்கு எப்போதும் ஆதரவாக செயல்படும் கட்சி நம் குடும்பம் மட்டுமே . வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment