கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறப்பு தேதி - CEO Proceedings - Asiriyar.Net

Wednesday, April 24, 2024

கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறப்பு தேதி - CEO Proceedings

 

பொருள்: பள்ளிக்கல்வித்துறை - பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளித்தல் - விடுமுறைகளுக்குப்பின் மீண்டும் பள்ளிகள் திறப்பு மற்றும் மாற்றுப்பணியில் பணிபுரியும் ஆசிரியர்கள்/ ஆசிரியரல்லா பணியாளர்கள் விடுவித்தல் - சார்பு.


2023-2024-ஆம் கல்வியாண்டில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வரும் 27.04.2024 முதல் 02.06.2024 வரை கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. கோடை விடுமுறை முடிவுற்று 03.06.2024 (திங்கள்) அன்று முதல் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் தெரிவிக்கப்படுகிறது.


மேலும், மாற்றுப்பணியில் பணிபுரியும் ஆசிரியர்கள்/ஆசிரியரல்லா பணியாளர்கள் 25.04.2024 அன்று விடுவிக்கப்பட்டு, 26.04.2024 தாய் பள்ளி/ அலுவலகத்தில் பணியேற்கும்பொருட்டு விடுவித்து அனுப்பிவைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்குத் அறிவுறுத்தப்படுகிறது.

குறிப்பு - கோடை விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு ஏதும் நடத்தக்கூடாது எனவும் திட்டவட்டமாகத் வகுப்புகள் தெரிவிக்கப்படுகிறது.Post Top Ad