1 முதல் 9 வரை தேர்ச்சி முடிவுகள் - தேதி, ஒப்பளிப்பு வழங்குதல், சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் - வழிகாட்டுதல்கள் - DEO Proceedings - Asiriyar.Net

Thursday, April 25, 2024

1 முதல் 9 வரை தேர்ச்சி முடிவுகள் - தேதி, ஒப்பளிப்பு வழங்குதல், சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் - வழிகாட்டுதல்கள் - DEO Proceedings

 1 முதல் 9 வரை பயின்ற மாணவர்களுக்கான தேர்ச்சி முடிவுகள் சார்பான ஆவணங்கள் சரிபார்த்தல் மற்றும் ஒப்பளிப்பு வழங்குதல் - தொடர்பாக


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 01 முதல் 09 ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளின் தேர்ச்சி விவரங்களை உரிய பதிவேடுகளில் பதிவு செய்து கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிட்ட நாட்களில் தேர்ச்சி ஒப்புதல் பெற அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


தேர்ச்சி வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள்.


1) கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி 2023-2024 ஆம் கல்வியாண்டில் 6முதல்8 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்க வேண்டும்.


2) ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதற்கு கீழ்க்கண்ட நெறிமுறைகளைப் பின்பற்ற கேட்டுக்கொள்ளப்படுகிறது.


ஆண்டு இறுதித் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே தேர்ச்சி வழங்க வேண்டும்.


* ஆண்டு இறுதித் தேர்விற்கு வருகை புரியாத மாணவர்களுக்கு மருத்துவச்சான்று சமர்ப்பித்தால் அரையாண்டு மற்றும் காலாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி வழங்கலாம்.


* மாணவர்களின் வருகை 75% க்கு குறையாமல் இருக்க வேண்டும். அவ்வாறு குறையும் பட்சத்தில் மருத்துவச் சான்று சமர்ப்பித்தால் தேர்ச்சி வழங்கலாம்.


3) தொகுப்பு மதிப்பெண் பதிவேட்டில் தேர்வுக்குழுவால் இயற்றப்பட்ட தேர்ச்சி வழங்குவதற்கான விதிகளை எழுதி தேர்வுக்குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கையொப்பமிட வேண்டும்.


4) 6 மற்றும் 7 ஆம் வகுப்புகளுக்குத் தனியாகவும் 8 மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கு தனியாகவும் படிவம் 2 இல் உள்ளபடி தேர்ச்சிச் சுருக்கத்தினைத் தொகுப்பு மதிப்பெண் பதிவேட்டின் இறுதியில் எழுத வேண்டும்.


Click Here to Download - 1-9th Student Result Instructions - DEO Proceedings - Pdf


Post Top Ad