தேர்தல் பணி மேலும் ஒரு ஆசிரியர் மரணம்! - Asiriyar.Net

Saturday, April 20, 2024

தேர்தல் பணி மேலும் ஒரு ஆசிரியர் மரணம்!

 
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் கல்பகனூர், சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலை  தளவாய்பட்டி பிரிவு ரோடு அருகில் இன்று (19.04.2024) வெள்ளி காலை 5.30 மணி அளவில் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் ஏத்தாப்பூர் கிராமம் கணேசபுரம்  முகவரியைச் சார்ந்த 


வெங்கடசுப்பிரமணியம் மகன் *ஜான் பிரகாஷ்* (வயது 39) மற்றும் அவரது  மனைவி *சில்வியா கேத்தரின் அனிதா* (வயது 35, *ஆசிரியை, R.C.பள்ளி, ஆத்தூர்*) ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் தேர்தல் பணிக்காக ஏத்தாப்பூரில் இருந்து ஆத்தூர் நோக்கி வந்து கொண்டிருக்கும் பொழுது நாய் குறுக்கே வந்ததால் வாகனம் தடுமாறி கீழே விழுந்ததில் ஜான் பிரகாஷ் என்பவருக்கு தலையிலும், சில்வியா கேத்தரின் அனிதா என்பவருக்கு கையிலும்  பலத்த அடிபட்டு சிகிச்சைக்காக பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில் கணவர் *ஜான் பிரகாஷ்* என்பவர் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இறந்து போன ஜான் பிரகாஷ் பிரேதம் ஆத்தூர்  அரசு மருத்துவமனையில் உள்ளது. காயம் அடைந்த சில்வியா கேத்தரின் அனிதா என்பவர் பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.Post Top Ad