யாரும் இல்லை.."காலியான 1,706 ஆசிரியர் பணி" அரசு எடுத்த அதிரடி முடிவு.!! - Asiriyar.Net

Post Top Ad


Friday, January 24, 2020

யாரும் இல்லை.."காலியான 1,706 ஆசிரியர் பணி" அரசு எடுத்த அதிரடி முடிவு.!!


அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவின் காரணமாக 1,706 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை அரசு திரும்பப் பெற்றுள்ளது.

இதுதொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், 2018 ஆகஸ்ட் 1 ஆம் தேதி நிலவரப்படி, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியாளர் நிர்ணயம் செய்யப்பட்டது. அப்போது ஆசிரியர் இல்லாமல் உபரியாக இருந்தக் காலிப்பணியிடங்களை, அரசிற்கு ஒப்படைக்க வேண்டும் என கூறப்பட்டது. அதனடிப்படையில் ஆசிரியர்கள் இல்லாமல் காலியாக உள்ள உபரிப் பணியிடங்களில், வரும் காலத்தில் ஆசிரியர்கள் நியமனம் செய்யக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.


அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்ததன் அடிப்படையில் 1,706 பணியிடங்கள் அரசுக்கு திரும்ப ஒப்படைக்கபட்டுள்ளன. இந்தப் பணியிடங்களில் இனிமேல் ஆசிரியர்கள் நியமிக்கப்படமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Recommend For You

Post Top Ad