அரசு பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த பள்ளிக்கல்வித்துறை தடை விதித்துள்ளது பள்ளிகளில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது ஆனாலும் பள்ளிகளில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கையும் எடுப்பதில்லை இதனால் ஒழுங்கீனமற்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவது பல பள்ளிகளில் தொடர்கதை ஆகி வருகிறது
அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் பல அரசு பணிகளில் படிக்கும் மாணவர்களில் சிலர் பள்ளிக்கு புத்தகப் பையுடன் செல்வதை விட செல்போனுடன் செல்வதையே வழக்கமாக கொண்டிருக்கின்றனர்
இவர்கள் வகுப்பறையில் அமர்ந்து ரீல்ஸ் வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் இந்த ஒழுங்கீனமற்ற செயலை கண்காணித்து அதற்கு கடிவாளம் போட வேண்டிய ஆசிரியர்கள் பின்விளைவுகளை நினைத்து நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர்
இதன் விளைவாக பொதுத்தேர்வில் விட்டு எடுத்து சென்றதையும் ரீல்ஸ் எடுத்து வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்த மாணவர்கள் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளனர்
வேலூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் படிக்கும் பிளஸ் டூ மாணவர்கள் தேர்வுக்கு பிட்டு எடுத்து சென்றதை போனில் ரீல்ஸ் வீடியோவாக எடுத்து சமூகத்து வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்
இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது பள்ளிக்கு செல்போனுடன் வந்தவர்கள் இப்போது பொது தேர்வு நடக்கும்போது விட்டு எடுத்துச் சென்று அதை ரீல்ஸ் வீடியோவாக எடுத்து வெளியிட்டது பள்ளி கல்வித்துறை மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது
தடம் மாறி செல்லும் மாணவர்கள் அடுத்து கட்டத்துக்கு நகரம் முன்பே மாணவர்களின் செயல்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை உறுதியான நடவடிக்கை எடுக்கவும் மாணவர்களை சீர்திருக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கவும் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்
மாணவர்களின் ரூல்ஸ் வீடியோ குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மணிமொழி அவர்களிடம் கேட்டபோது அதுபோன்ற வீடியோ இதுவரை என் கவனத்துக்கு வரவில்லை என்றார்.
No comments:
Post a Comment