தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டு மற்றும் 3-ம் பருவத் தேர்வுகள் ஏப்.2 முதல் 12-ம் தேதிக்குள் நடத்தப்படும். தொடர்ந்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஏப்.13-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது.
இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டன. அதன்படி ஏப்.10, 12-ம் தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் ஏப்.22, 23-ம் தேதிகளுக்கு தள்ளிவைக்கப்பட்டன. அதேநேரம் கோடை விடுமுறை தொடர்பாக ஆசிரியர்கள், மாணவர்களிடம் குழப்பம் நிலவி வருகிறது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.
ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஐந்தாம் தேதி அன்றோடு ஆண்டு தேர்வுகள் முடிவடைகிறது. ஆறாம் தேதி முதல் அந்தக் குழந்தைகளுக்கு கோடை விடுமுறையாக கருதலாம்.
நான்காம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு , ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பயிலக்கூடிய மாணவர்களுக்கு 10-ஆம் தேதி மற்றும் 12ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாற்றி வைக்கப்பட்டுள்ளது. அதனால் மாணவர்களை தேர்விற்கு ஆயத்தப்படுத்தும் விதமாக 12-ம் தேதி வரை நான்கு வகுப்பு, ஐந்தாம் வகுப்பு,ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிதல் வேண்டும்.
அவர்களை தேர்வுக்கு ஆயத்தப்படுத்துகின்ற பணியை ஆசிரியர்கள் மேற்கொள்ளலாம்.
அதன் பிறகு தேர்தல் பணிகள் ஆசிரியர்களுக்கு 15 ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை உள்ள காரணத்தினால் நான்காம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு ,ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை.
மீண்டும் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாணவர்கள் தேர்வில் பங்கேற்கக் கூடிய வகையில் பள்ளிக்கு வருகை புரிய வேண்டுமென்பதை தெளிவாக எடுத்துச் சொல்லுதல் வேண்டும்,
அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரைகள் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஆசிரியர்களை பொறுத்தவரை 26 ஆம் தேதி வரை அவர்களுக்கு பள்ளி வேலை நாட்களாக கருதப்படுகிறது. அவர்கள் இடையில் தேர்தல் பணிக்காக செல்கின்ற போது அது on duty ஆக கருதலாம்.
தேர்தல் பணி இல்லாத நேரங்களில் பள்ளிக்கு வருகை புரிந்து ஏற்கனவே நடைபெற்ற தேர்வு விடைத்தாள்களை திருத்துகின்ற பணி, மாணவர்களுக்கான பணி , வட்டார கல்வி அலுவலருக்கு அனுப்புகின்ற பணி ஆகியவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம். தொடர்ந்து ஏப்.24-ல்தொடங்கி கோடை விடுமுறை தரப்படும்.
அதேநேரம் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் இறுதி வேலை நாளான ஏப்.26-ம் தேதி வரை அரசு விடுமுறை இல்லாத தினங்களில் பள்ளிக்கு வருகை புரிவது அவசியம். அந்த நாட்களில் மாணவர் சேர்க்கை, விடைத்தாள் மதிப்பீடு மற்றும் இதர அலுவல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment