ஜாதி கயிறு கட்டும் மாணவர்கள் மற்றும் அவர்கள் படிக்கும் பள்ளிகள் குறித்து பட்டியல் சேகரிக்க, கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில், ஒரு ஜாதியை சேர்ந்த மாணவர்கள், பட்டியலின ஜாதி மாணவரின் வீட்டுக்குள் புகுந்து, மாணவரையும், அவரது தங்கையையும் சரமாரியாக வெட்டிக் கொலை செய்ய முயன்றனர்.
இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த இருவரும், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
இச்சம்பவம், முதல்வர் முதல் அதிகாரிகள் வரையிலும், பெற்றோர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்களிடம் ஜாதி பாகுபாடு இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக, முதல்வரும், அமைச்சரும் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறை நடத்திய விசாரணையில், இந்த பிரச்னைக்கு, ஜாதி கயிறு ஒரு முக்கிய அடையாளமாக இருந்தது தெரியவந்து உள்ளது. அதனால், ஜாதி கயிறு பழக்கத்தை பள்ளி மாணவர்களிடம் இருந்து ஒழித்துக்கட்ட கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
மாணவர்கள் மத்தியில், இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஒழுக்க வகுப்புகளை நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்காக, ஜாதி கயிறு கட்டும் மாணவர்கள் படிக்கும் பள்ளிகள், மாணவர்கள் வசிக்கும் இடங்கள் போன்றவற்றை பட்டியலாக சேகரிக்க, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment