பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து வரும் மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவியருக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாற்றுத் திறன் மாணவர்களுக்கு போதிய புரிதல் இல்லாமையாலும், அறியாமலும் உள்ளனர்.
அதனால் பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற மாற்றுத்திறன் மாணவர்கள் அறியும் வகையில் அந்தந்த கல்வி வளாகங்களில் தகவல் பலகையில் இதுகுறித்த விவரங்கள் இடம்பெறச் செய்ய வேண்டும்.
அதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த கல்வி நிறுவனங்களில் கிடைக்க செய்ய வேண்டும் என்று அந்த உதவித்தொகை பெறும் தகுதியுள்ள மாணவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு இந்த உதவித் தொகை சேர ஒரு பொறுப்பாசிரியரை நியமிக்க வேண்டும் என்றும் மாற்றுத் திறனாளிகள் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான அரசாணையில், தெரிவிக்கப்பட்டுள்ளபடி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் மாற்றுத்திறன் மாணவ, மாணவியர் கல்வி உதவித் தொகை பெறும் வகையில் இதுதொடர்பான விவரங்களை பள்ளிகளின் தகவல் பலகையில் இடம் பெறச் செய்ய வேண்டும்.
அதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்த சுற்றறிக்கை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment