காலை சிற்றுண்டி உணவு திட்டம் - முதல்வருக்கு ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை - Asiriyar.Net

Friday, August 25, 2023

காலை சிற்றுண்டி உணவு திட்டம் - முதல்வருக்கு ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை

 


முதல்வருக்கு TNPTA வின் கோரிக்கை


முதலமைச்சரின் சீரிய திட்டமான காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை 6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தவேண்டும்.


இந்த திட்டத்தை கண்காணிக்க ஆசிரியர்கள் காலை 7 மணிக்கே வர வேண்டும் என்ற அறிவிப்பை திரும்ப பெற்று, இந்த திட்டத்தில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இந்த திட்டத்தை சத்துணவு பணியாளர்களிடமே ஒப்படைத்து, ஆசிரியர்களை கற்பித்தல் பணியை மட்டும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.


சத்துணவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்கி, சத்துணவு திட்டம மாநியத்தை அதிகரிக்க வேண்டும்.


அனைத்து பள்ளிகளிலும் சமூக நல திட்டங்கள், புள்ளிவிவரப் பணிகள், EMIS பணிகள் போன்ற பணிகளை மேற்கொள்ள சிறப்பு கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டும்.


மாண்புமிகு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அவர்களுக்கு

TNPTA-தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம்

கோரிக்கை...


தோழமையுடன்,

L.மணி,

மாநில பொதுச் செயலாளர்.

🙏🙏🙏


செய்தி வெளியீடு....

K.சேகர்,

மாநில செய்தி தொடர்பு செயலாளர்,

தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம்,

TNPTA.


முதலமைச்சர் காலை சிற்றுண்டி உணவு திட்டம் 1 முதல் 5 வகுப்புகள் - ஆசிரியர்கனின் பணி சுமை காரனமாக சத்துளாவு அமைப்பாளர் பொறுப்பில் ஒப்படைக்கவும் - ஆசிரியர்களை இப்பொறுப்பிலிருந்து விடுவிக்கவும் - திட்டத்தை 6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கும் நீட்டிக்கவும் கோருதல் - சார்பாக


தமிழ்நாட்டில் சமூக நீதியை பேணும் வகையிலும் - ஏழை எளிய நடுத்தர மாணவர்களின் பசியை போக்கும் வகையிலும் - அந்த மாணவர்களின் கல்வி நலனுக்காக காலை சிற்றுண்டி உணவு திட்டம் என்ற சீரிய திட்டத்தை கொண்டு வந்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு TNPTA-தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரத்தில் தற்போது அந்த திட்டத்தை கண்காணிக்க பள்ளி ஆசிரியர்களை காலை 7:00 மணிக்கு பள்ளிக்கு வர வேண்டும் என்று பல இடங்களில் சுற்றறிக்கை மூலமாகவும் வாய்மொழியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 தற்போது தமிழ்நாடு தொடக்கக் கல்வியில் பணிபுரியும் ஆசிரியர்கள் எண்ணும் எழுத்தும், EMIS, பயிற்சிகள், மாணவர்களின் நல திட்டங்கள், விளையாட்டுப் போட்டிகள், மாணவர் மன்றங்கள், புள்ளிவிவரங்கள் தருதல் என பல்வேறு விதமான பணிச்சுமைகளில் உன்னனர் என்பதை TNPTA தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் தங்களுக்கு சுட்டிக்காட்டுகிறது. இதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு சிறப்பு கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டும் எனவும் எங்கள் சங்கம் தொடர்ந்து தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வருகிறது.


இந்த நிலையில் - எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போல - காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை கண்காணிக்க காலை 7 மணிக்கு ஆசிரியர்கள் வரவேண்டும் என்ற அறிவிப்பு - தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும், கடுமையான மன உளைச்சலையும் ஏற்படுத்தி இருக்கிறது. 


இதனால் கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படும் என்பதையும் இந்த திட்டத்திற்கு பணியாட்கள் தேர்வு செய்த நடவடிக்கைகளில் பல பள்ளிகளில் பள்ளி தலைமையாசிரியருக்கும் பொதுமக்களுக்கும் பவ்வேறு சச்சரவுகள் நிகழ்ந்து வருகின்றன என்பதையும் TNPTA தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் மனவருத்தத்தோடு தங்களுக்கு சுட்டிக்காட்டுகிறது. 


முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு எம்ஜிஆர் அவர்கள் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்த போது ஆசிரியர்கள் பொறுப்பில் இருந்தது.  தமிழ்நாட்டு ஆசிரியர்களின் தொடர்ச்சியான போராட்டங்களினால் சத்துணவு திட்டம் சமூக நலத்துறைக்கு கொண்டு செல்லப்பட்டு அதற்கென்று தனியாக அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டது கடந்த கால வரலாறு.


எனவே, மீண்டும் சத்துணவு திட்டம் ஆசிரியர்களும் ஒப்படைக்கப்படுமோ என்ற மன உளைச்சலில் ஆசிரியர்கள் உள்ள நிலையில் - தற்போது தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாவின் அவர்களின் சீரிய திட்டமான காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை சத்துணவு அமைப்பாளர்களிடமே ஒப்படைத்து ஆசிரியர்களை இப்பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் எனவும் 


சத்துணவு திட்டத்திற்கு - ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீடுககளை அதிகரித்து, சத்துணவுப் பணியாளர்களின் நீண்டகால கோரிக்கையான பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்கப்படவேண்டும் - 6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கும் இந்த திட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்னும் TNPTA தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.


Post Top Ad