ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் அர்ச்சனா பட்நாயக் மாற்றம்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, August 20, 2023

ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் அர்ச்சனா பட்நாயக் மாற்றம்!

 
தமிழ்நாட்டில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


தமிழக தலைமைச் செயலாளர்  சிவதாஸ் மீனா ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.


உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் ராஜாராமன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை கூடுதல் முதன்மை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


தமிழ்நாடு தொழில் துறை மற்றும் தொழில் வணிகத்துறை இயக்குனர் சிகி தாமஸ் வைத்தியன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையராக இருந்த ஆனந்தகுமார் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் அர்ச்சனா பட்நாயக் தொழிலாளர் நலத்துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.


தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சிறப்பு செயலாளர் பூஜா குல்கர்னி உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


தமிழ்நாடு மாநில வரலாற்று ஆய்வு ஆவண காப்பகங்கள் மற்றும் ஆராய்ச்சி ஆணையர் பிரகாஷ் வருவாய் துறை நிர்வாக கூடுதல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.


வருவாய்த்துறை நிர்வாக கூடுதல் ஆணையர் கலையரசி சுகாதாரத்துறை சிறப்பு செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.


ஆசிரியர் தேர்வு வாரிய கட்டுப்பாட்டாளர் வெங்கட பிரியா ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக மாற்றப்பட்டுள்ளார்.


தமிழக சிறு தொழில் மேம்பாட்டு கழகத்தின் தலைவராக விக்ரம் கபூர் நியமிக்கப்பட்டுள்ளார்.


மதுரை ஊரக மேம்பாட்டு முகமை திட்ட அதிகாரியாக மோனிகா ராணா நியமிக்கப்பட்டுள்ளார்.


சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய செயல் இயக்குனராக சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.


திட்டம் மற்றும் மேம்பாட்டு துறை கூடுதல் செயலாளராக கோபால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


Post Top Ad