காலை உணவுத்திட்டம் -பிரபல நாளிதழ் செய்திக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் - Asiriyar.Net

Thursday, August 31, 2023

காலை உணவுத்திட்டம் -பிரபல நாளிதழ் செய்திக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்

 

பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கிடும் முதல்வரின் காலை உணவு திட்டம் குறித்து விமர்சித்து செய்தி வெளியிட்ட பிரபல நாளிதழுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தனது X பக்கத்தில் (முந்தைய டிவிட்டர்) கண்டனம் தெரிவித்துள்ளார்.



நகரப் பகுதிகளிலும், கிராம பகுதிகளிலும் காலையிலேயே பள்ளிக்கு செல்லக் கூடிய குழந்தைகள் அவசரத்திலும், குடும்ப சூழ்நிலை என பலவித காரணங்களுக்காக காலை உணவை சரிவர சாப்பிடுவதில்லை என அரசுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது.


முதற்கட்டமாக கடந்த ஆண்டு செப்டம்பர் 15ல் தொடங்கப்பட்ட இத்திட்டமானது தற்போது தமிழகத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 18 லட்சம் மாணவ - மாணவியர் பயனடைகின்றனர்.





No comments:

Post a Comment

Post Top Ad